இந்திய செய்திகள்

இந்திய விமானங்களில் தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்.. விமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.) விமான நிறுவனங்களுக்கான விதிமுறைகளைகடுமையாக்கியுள்ளது. ஜூன் 19 முதல், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களில், கடந்த 24 நாள்களில் 9 முறைதொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, இத்தகைய தொடர் கோளாறுகள் குறித்து விளக்கமளிக்குமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியதுஅதுபோன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை, இண்டிகோ விமான  ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத்துக்கு செல்லவிருந்த நிலையில் விமானம்தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. அது மட்டுமின்றி கடந்த சனிக்கிழமை இரவு, ஏர் இந்தியாகோழிக்கோடுதுபாய் விமானம் மஸ்கட் நோக்கி திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இனி அனைத்து விமானங்களும் சான்றளிக்கப்பட்ட ஊழியர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே புறப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதுதங்கள் நிறுவனத்திடம் இருந்து முறையான அங்கீகாரத்துடன்விமானப் பராமரிப்புப் பொறியாளர் பி1/பி2 உரிமம்என்ற உரிமத்தைபெற்ற ஒரு ஊழியர் சான்றளிக்க வேண்டும். அத்தகைய என்ஜினியர்கள் இல்லாவிட்டால், அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் நியமித்துக்கொள்ளவேண்டும். மேலும், அனைத்து விமான நிறுவனங்களும் ஜூலை 28ஆம் தேதிக்குள் புதிய விதிமுறைகளின் கிழ் செதல்பட வேண்டும்என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!