அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

UAE: கடந்த மூன்று ஆண்டுகளில் அமீரகத்தில் தான் அதிகமான இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு தெரிவிப்பு..!

அமீரகத்தில் 2019 முதல் 2021 வரை 2714 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த தகவலை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் 11,347 இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் இறந்துள்ளனர். அதில் பெரும்பாலான இறப்புகள் ஐக்கிய அரபு அமீரகம் (2714), சவுதி அரேபியா (2328), குவைத் (1201), ஓமன் (913), மலேசியா (592), கத்தார் (420), அமெரிக்கா (395), பஹ்ரைன் (352) மற்றும் இத்தாலி (304) ஆகும்.

அதன்படி, 2019 முதல் 2021 வரை வெளிநாடுகளில் மரணித்து இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 16,472 ஆக இருந்தது என்றும் அவர் கூறினார். 2021 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட உடல்கள் 5,822 ஆக இருந்தது, பெரும்பாலான உடல்கள் ஐக்கிய அரபு அமீரகம் (1464), சவுதி அரேபியா (961), குவைத் (718), ஓமன் (370), கத்தார் (292), மலேசியா (287), பஹ்ரைன் (261), அமெரிக்கா (245) மற்றும் இத்தாலி (214) இருந்து கொண்டுவரப்பட்டவை.

வெளிநாட்டில் இருந்து உடல்ளை எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளில் மருத்துவ அறிக்கை, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ், விபத்து அல்லது இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டால், போலீஸ் அறிக்கை மற்றும் உள்ளூர் தகனம் / அடக்கம் விவரம், உடலை கொண்டு செல்வதற்கு இறந்தவரின் உறவினர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் போன்றவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

வெளிநாட்டில் மரணிக்கும் இந்தியர்களின் உடலை எடுத்துச் செல்வது தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரணித்த உடல்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், இறந்தவரின் குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பு கொள்கின்றன என்று அமைச்சர் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!