அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் தாயின் அலட்சியத்தால் காருக்குள் மாட்டிக்கொண்ட குழந்தை.. மீட்டெடுத்த காவல்துறை..!

அமீரகத்தில் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக காரில் சென்ற தாய் தனது இரண்டு வயது மகனை காரிலேயே விட்டுச்சென்றுள்ளார். அப்போது காரில் கதவுகள் தானாக பூட்டப்பட்டதால் குழந்தை காரில் மாட்டிக்கொண்டதாக பெடரல் பப்ளிக் பிராசிகியூஷன் (Federal Public Prosecution) ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

“கார் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்த நிலையில் குழந்தை தனியாக இருந்தது. ஷாப்பிங் முடிந்து காருக்குத் திரும்பிய தாய் அதிர்ச்சியடைந்தார், சாவியை காருக்குள் வைத்துவிட்டு வந்ததால்,  காரின் கதவுகளை திறக்க முடியவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரை திறக்க முடியாததால், தனது குழந்தை ஆபத்தில் இருப்பதை உணர்ந்த தாய், உதவிக்கு அழைக்க விரைந்தார் என்று மத்திய அரசு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர். பின்னர் “காவல்துறைக்கு தொடர்பு கொண்டதை அடுத்து காரின் கதவுகளைத் திறந்து குழந்தை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். மேலும் தாமதம் ஏற்பட்டால், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்திருக்கலாம் அல்லது மூச்சுத் திணறல் காரணமாக இறந்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தது.

பெற்றோர்களின் அலட்சியச் செயல் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களில் குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்கள் அலட்சியமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்தனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!