இந்திய செய்திகள்

இனி இந்தியா செல்லும் விமான பயணிகளுக்கு முக கவசம் கட்டாயமில்லை..!! விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்..!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் பயணிகள் இனி விமானப் பயணத்தின் போது முக கவசம் அணிய தேவையில்லை என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய விமான நிறுவனங்களில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமான பயணம் என எந்த விமான பயணமாக இருந்தாலும், இதுவரையிலும் விமானங்களில் பயணம் செய்யும் போது முக கவசங்கள் பயன்படுத்துவது கட்டாயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கான தகவல்தொடர்புகளில், விமானப் பயணத்தின் போது முக கவசங்களைப் பயன்படுத்துவது இனி கட்டாயமில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா மேலாண்மை குறித்த தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் அரசாங்க கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் கொரோனாவால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பயணிகளும் முகக் கவசங்களைப் பயன்படுத்துவதே முன்னுரிமை என்று விமானத்தில் உள்ள அறிவிப்புகளில் இனிமேல் தெரிவிக்கப்படும் என்று அரசாங்க தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விமானத்தில் உள்ள அறிவிப்புகளின் ஒரு பகுதியாக அபராதம் அல்லது தண்டனை நடவடிக்கை குறித்த குறிப்பிட்ட செய்தி எதுவும் இனி அறிவிக்கப்பட வேண்டியதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!