இந்திய செய்திகள்

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா: சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில் மீண்டும் ஆரம்பிக்கும் சோதனை..!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவலானது கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் வந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் உத்வேகம் எடுத்துள்ளது. சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் கொரோனா நோய்த்தொற்று திடீரென அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் உள்ள விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு சீரற்ற சோதனையை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனாவிற்கான நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்த ஒரு அறிவிப்பில்  “கொரோனா இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் அறிவுறுத்தியுள்ளேன். எந்தச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் “சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு சீரற்ற மாதிரி சோதனை செய்யப்படும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் தற்போதைய கொரோனா தொற்றுகளின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கும் Omicron வகை வைரஸானது மூன்று பேருக்கு பாதித்துள்ளதாக இதுவரை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நிபுணர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பின் போது, ​​உலகளாவிய கொரோனா நிலைமை மற்றும் உள்நாட்டு சூழ்நிலை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவின் தகுதியான மக்கள்தொகையில் 27-28 சதவீதம் பேர் மட்டுமே கொரோனாவிற்கான தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு நெரிசலான பகுதிகளில் மக்கள் முக கவசங்களை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!