அமீரக செய்திகள்

சவூதியில் தொடரும் கனமழை.. குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!

சவூதி அரேபியாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் இந்த வானிலையானது நாளை (செவ்வாய்க்கிழமை) வரை தொடர்ந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதியின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள தேசிய வானிலை மையமானது (NCM) கனமழையுடன் சேர்தது பனிப்பொழிவும் ஒரு சில பகுதிகளில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

NCM வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சவூதியின் வடக்கு எல்லை பகுதிகள், மக்கா, மதீனா, அல் ஜூஃப், தபூக், ஹைல், அல் காசிம், அல் ஷர்கியா, ரியாத் மற்றும் அல் பஹா போன்ற பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழையுடன் சேர்த்து தூசி, ஆலங்கட்டி மழையும் பெய்யும் என்பதால் அது தெரிவுநிலையை (visibility) பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சவூதியில் பெய்து வரும் மழையின் காரணமாக ஜித்தாவில் உள்ள அதிகாரிகள் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்க்க பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் மழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!