அமீரக செய்திகள்

துபாயில் புதிய வாகன சோதனை மற்றும் பதிவு மையத்தை திறந்த RTA..!!

துபாயின் Seih Shuaib பகுதியில் விரைவு வாகன சோதனை மற்றும் பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்ட விவரங்களின்படி, இந்த மையத்தில் எட்டு சோதனை வழித்தடங்களும் 500 வாகனங்களை பரிசோதனை செய்யக்கூடிய அளவுக்கு வசதிகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

மேற்கூறியபடி, கனரக வாகனங்களை பரிசோதனை செய்வதற்கு ஐந்து வழித்தடங்களும், இலகுரக வாகனங்களுக்கு மூன்று வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் விரிவான சோதனைக்கு ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த மையத்தில் கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்கான மொபைல் சோதனை சேவையும் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மையம் வழங்கும் பிற சேவைகளில் விஐபி(VIP) என்ற பிரிவு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆகையால் இந்த விஐபி பிரிவில் வாடிக்கையாளர்கள் அவர்களது பரிவர்த்தனைகளை விரைவாகச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போக்குவரத்து ஆணையம் இது குறித்து தெரிவிக்கையில், இந்த மையத்தில் லைசன்ஸ் பிளேட்  தொழிற்சாலை மற்றும் இலகுரக மற்றும் கனரக வாகனங்களை பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்பும்  இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை மையம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!