அமீரக சட்டங்கள்

UAE: குடியிருப்பாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு… அவசரத் தேவைகளுக்கு இந்த வங்கிகளில் உங்கள் சம்பளத்தை முன்பணமாக பெறலாம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக சில சலுகைகளை வழங்குகின்றன. அதில் ஒன்றாக, வாடிக்கையாளர்களின் மருத்துவமனைக் கட்டணம், கிரெடிட் கார்டு செலுத்துதல், மின்சாரக் கட்டணம் அல்லது வேறு ஏதேனும் அவசரப் பணத் தேவையாக இருந்தால் அவற்றை செலுத்துவதற்காக வேண்டி சம்பளத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளும் திட்டத்தை குறிப்பிட்ட வங்கிகள் பின்பற்றுகின்றன.

இதன்மூலம் குடியிருப்பாளர்கள் பிறரிடமிருந்து கடன் வாங்குவதை தவிர்த்து தனது பணத்தையே செலவு செய்வது மிகவும் சாத்தியமான தேர்வாகக் கருதியுள்ளனர். எனவே, இந்த வசதியைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்திற்கு வங்கி ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், வங்கியின் போர்டல், ATM, வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது கிளைக்குச் சென்று ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் சம்பளத்தை நேரடியாக தங்கள் கணக்கில் வரவு வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவற்றில் சில வரம்புகளும் நிபந்தனைகளும் உள்ளன. எனவே, முன்கூட்டியே சம்பளத்தைப் பெற விரும்பும் ஊழியர்கள் விண்ணப்பிக்கும் முன்பு அந்த நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வங்கிகளின் முதல் நிபந்தனையாக, வங்கிக் கணக்கில் ‘Salary in Advance’ செயல்பாட்டில் இருக்கும்போது, வாடிக்கையாளர்கள் தங்கள் சம்பளத்தை வேறு வங்கிக்கு மாற்றக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில வங்கிகள் பிற வங்கிகளில் சம்பளப் பரிமாற்றக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சில ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன் முன்கூட்டியே சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில வங்கிகள், சம்பள ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் வாடிக்கையாளர்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்குகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்கக்கூடிய வங்கிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Dubai Islamic Bank: இந்த வங்கியில் வாடிக்கையாளர்களின் மாதாந்திர நிகர சம்பளத்தில் 90 சதவீதம் வரை முன்பணமாக 13,500 திர்ஹம்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இதன் கீழ் DIB வாடிக்கையாளருக்கு வட்டியில்லா கடனை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Abu Dhabi Islamic Bank: ADIB தனது வாடிக்கையாளர்களுக்கு முராபஹா அடிப்படையில் பூஜ்ஜிய செயல்முறைக் கட்டணத்திலும் (Processing Fee) போட்டியான லாப விகிதத்திலும் 50 சதவீதம் வரை சம்பளத்தைப் பெற அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Abu Dhabi Commercial Bank: இந்த வங்கியில் ஒரு முறை செயலாக்க கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து 105 திர்ஹம்கள் வசூலிக்கப்படும். எனவே, வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது பணத்தை உடனடியாகப் பெற முடியும். மேலும், வாடிக்கையாளர்களின் சம்பளத்தில் 2.5 மடங்கு வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ras Al Khaimah bank: வாடிக்கையாளர்கள் 200 திர்ஹம் கட்டணமாக செலுத்தி சம்பள முன்பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, RAKislamic கணக்கிற்கு சம்பளத்தை மாற்ற வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட RAKdirect வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

United Arab Bank: இந்த வங்கி கர்த் அல் ஹசன் (Qard Al Hasan) என்ற வட்டியில்லாக் கடனைக் குறிக்கும் இஸ்லாமிய கருத்தின் அடிப்படையில் முன்கூட்டியே சம்பளத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது குறைந்த மாதாந்திர கட்டணத்தை வழங்குகிறது மற்றும் அவசரகால பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வட்டி இல்லை என்று கூறியுள்ளது. கூடுதல் நிதியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதியும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Ajman Bank: வாடிக்கையாளர்களின் எதிர்பாராத நிதித் தேவைகளுக்கு Shariah-compliant வங்கியானது சம்பள முன்பண வசதியை வழங்குகிறது. இந்த வசதிக்கு ஒரு ஊழியர் விண்ணப்பிக்க, அவர் சம்பளம் பெறும் தனிநபராகவும், அந்த சம்பளத்தை அஜ்மான் வங்கியில் பெறுபவராகவும் இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க நிபந்தனையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களின் சம்பளத்தில் 80 சதவீதம் வரை முன்பணமாக வழங்கப்படும், மேலும் வருடத்திற்கு 12 முறைக்கு மேல் விண்ணப்பிக்க முடியாது. இதற்கு 300 திர்ஹம் கட்டணத்தை வசூலிக்கும் வங்கியில் இருந்து பெறப்பட்ட தொகையை மாத இறுதியில் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Sharjah Islamic Bank: Tayseer மூலம் வாடிக்கையாளர் தனது சம்பளத்தில் 80 சதவீதத்தை Qard Hassan ஆகப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஓவர் டிராஃப்ட் வடிவத்தில் தொகை வழங்கப்படுவதால், ATM, வங்கி காசோலை மூலம் தொகையை எடுக்கலாம் அல்லது மற்றொரு கணக்கிற்கு ஒரு தொகையை மாற்றி பணத்தை எடுத்துக் கொள்ளமுடியும். இதற்கு கட்டணமாக 200 திர்ஹம்களும் ஐந்து சதவீத VAT-யும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Emirates NBD: துபாயின் மிகப்பெரிய வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கி ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் சம்பளத்தை இரண்டு மடங்கு வரை முன்பணமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க நிபந்தனையாக, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச நிகர வருமானம் 3,000 திர்ஹம்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளருக்கு மாதத்திற்கு 1.5 சதவீதம் மற்றும் ஆண்டுக்கு 18 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!