அமீரக செய்திகள்

UAE: அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடி..!! சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு அறிவிப்பை வெளியிட்ட எமிரேட்…

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ராஸ் அல் கைமா பொது சேவை துறை (RAKPSD) குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சில பொதுவான விதிமீறல்களைச் செய்த குடியிருப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச மகிழ்ச்சி தினத்தை கொண்டாடும் வகையில் இந்த தள்ளுபடியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்குவதாக RAKPSD தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த தள்ளுபடி மார்ச் 20 முதல் 22 வரை மூன்று நாட்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால், இதில் குப்பை கொட்டுதல், பொது இடங்களில் குப்பைகளை வீசுதல், நியமிக்கப்படாத இடங்களில் புகைபிடித்தல், லாரிகளுக்கான டோல்கேட் விதிமீறல்கள் போன்ற சுற்றுச்சூழல் மீறல்கள் உட்பட RAKPSD இன் கீழ் வரும் குற்றங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.நா சபையால் நிறுவப்பட்ட, சர்வதேச மகிழ்ச்சி தினம் மார்ச் 20 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில், மகிழ்ச்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு என்பது நாட்டின் முக்கிய திட்டங்களின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!