வளைகுடா செய்திகள்

ஓமான்: தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அதிக காற்றழுத்தம்.. இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!! CAA வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு..!!

ஓமானில் இன்று, ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.19) முதல் வியாழன் (மார்ச்.23) வரை ஐந்து நாட்களுக்கு காற்றழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் குடியிருப்பாளர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (Civil Aviation Authority – CAA) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நேஷனல் மல்டி ஹசார்ட் முன்னெச்சரிக்கை மையம் (National Multi Hazard Early Warning Centre) வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிவிப்புகள் மற்றும் பகுப்பாய்வின் படி, ஓமானில் மார்ச் 19 தொடங்கி ஐந்து நாட்களுக்கு மேலடுக்கு காற்றழுத்தத் தாழ்வு பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தோஃபர் மற்றும் அல் வுஸ்தா மாகாணங்களின் சில பகுதிகளில் மேக மூட்டமாகவும், அவ்வப்போது இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கம் திங்கள்கிழமை மாலையில் இருந்து மற்ற கவர்னரேட்டுகளுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வானிலையால் எதிர்பார்க்கப்படும் விளைவுகள்:

>> மாகாணத்தில் அவ்வப்போது ஏற்படும் இடியுடன் கூடிய மழையானது, பள்ளத்தாக்குகளில் நீர் பாய்வதற்கு வழிவகுக்கும்.

>> 15 முதல் 25 kt (28-45km/h) வேகத்தில் வீசக்கூடிய காற்று.

>> பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் கடல் சீற்றம் மிதமானது முதல் கரடுமுரடாக இருக்கும் என்றும் அலையின் அதிகபட்ச உயரம் 2-3 மீட்டர் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

>> ஆகையால், மழையின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பயணம் செய்வதற்கு முன் தெரிவுநிலை மற்றும் கடல் நிலையை சரிபார்க்கவும் மற்றும் வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்புகள் மற்றும் அறிக்கைகளைப் பின்பற்றவும் CAA அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!