அமீரக செய்திகள்

ஹைப்பர் மார்க்கெட்டிற்கு வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய துபாய் ஆட்சியாளர்!! வைரலான வீடியோ…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், துபாயில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டிற்கு திடீரென வருகை தந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

துபாயில் இருக்கக்கூடிய ஜெயின்ட் ஹைப்பர் மார்க்கெட்டுக்கு துபாய் ஆட்சியாளர் ஒரு சில அதிகாரிகளுடன் திடீரென வருகை தந்துள்ளார். மேலும், அவரது வருகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அல் கவானீஜ் பகுதியில் உள்ள இந்த விற்பனை நிலையத்திற்கு துபாய் மன்னர் உள் செல்வதையும், அங்குள்ள பொருட்களை வரிசையாக பார்வையிட்டுக்கொண்டு கடந்து செல்வதையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணலாம்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு விற்பனையகங்களில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்து வரும் நிலையில், அவர் ஹைப்பர் மார்க்கெட்டிற்கு வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இது போன்ற சில்லறை விற்பனைக் கடைகளை துபாய் ஆட்சியாளர் பார்வையிடுவது முதல் முறை அல்ல. இதுபோலவே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் யூனியன் கோப் சூப்பர் மார்க்கெட்டுக்கு அவர் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது. அத்துடன் அங்குள்ள பொருள்களின் விலைகளை சரிபார்த்திருக்கிறார். அதற்கு முந்தைய ஆண்டு அவர் மற்றொரு உள்ளூர் பல்பொருள் அங்காடிக்கு திடீர் வருகை மூலம் குடியிருப்பாளர்களை ஆச்சரியப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!