அமீரக செய்திகள்

UAE: அனுமதியின்றி இஃப்தார் உணவுகளை விநியோகித்தால் 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம்!! அனுமதி பெறுவது எப்படி..??

துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் புனித ரமலான் மாதத்தில் இஃப்தார் உணவுகளை விநியோகிக்க அனுமதி பெற வேண்டும் என்று துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (Department of Islamic Affairs and Charitable Activities) வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்துள்ளது. மேலும், உணவு விநியோகத்தில் தேவையான விதிகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையின் துணை இயக்குனரான முகமது மொசாப் தாஹி அவர்கள் கூறுகையில், எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் அனுமதியின்றி உணவை விநியோகித்தால் அங்கீகரிக்கப்படாத தொண்டு செயலாக கருதப்படும் என்றும், துறையின் முன் அனுமதியின்றி ஆடியோ, வீடியோ அல்லது ஊடகங்கள் மூலம் நன்கொடை சேகரிப்பது போன்ற விதிமீறல்களின் கீழ் இது சேர்க்கப்படுவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உரிமையாளரை அம்பலப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2015 ஆம் ஆண்டிற்கான எமிரேட் ஆஃப் துபாயில் நிதி சேகரிப்பை ஒழுங்குபடுத்தும் ஆணையில் கூறப்பட்டுள்ளபடி, விதிகளை மீறுபவர்கள் தகுதிவாய்ந்த நீதித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று தாஹி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, முறையான லைசன்ஸ் இல்லாமல் விளம்பரம் செய்தால் அல்லது நன்கொடைகள் வசூலித்தால் 5,000 திர்ஹம்களுக்குக் குறையாமல் மற்றும் 100,000 திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது ஒரு மாதத்திற்குக் குறையாத மற்றும் ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

உண்பதற்கு பாதுகாப்பானதா?

>> IACAD அதிகாரிகள் மாநாட்டின்போது, இஃப்தாரில் நன்கொடையாக வழங்கப்படும் உணவை உட்கொள்வதற்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, இஃப்தார் உணவு விநியோகத்திற்கான அனுமதியைப் பெறுவதற்கு மக்கள்துறையை தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

>> அதேவேளை, அனுமதியைப் பெறும்போது, அவர்கள் உணவு வழங்கும் இடம் மற்றும் தேதி குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, இஃப்தார் உணவுகளை விநியோகிக்க மற்றவர்களுக்கு மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும் என்று IACAD அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://iacad.gov.ae/ என்ற லிங்க்கை கிளிக் செய்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது 800600 என்ற எண்ணிற்கு அழைத்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, பின்வரும் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • எமிரேட்ஸ் ஐடி
  • விநியோக இடத்தை உள்ளிடுதல்
  • உணவகத்தின் பெயர் மற்றும் இடம், உணவு எங்கிருந்து பெறப்படுகிறது என்ற விபரங்களை பதிவு செய்தல்

Related Articles

Back to top button
error: Content is protected !!