அமீரக செய்திகள்

UAE: ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு ஜொலிக்கும் அபுதாபி..!! சாலையெங்கும் நிறுவப்பட்டுள்ள மின் விளக்குகள்…!!

ஷவ்வால் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அபுதாபியின் பொது இடங்கள், முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் அனைத்தும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெரிவிக்கையில் கோலாகலமாகக் கொண்டாடும் ஈத் பண்டிகையில் அமீரகத்தில் மகிழ்ச்சியைத் தூண்டுவதையும் சமூக உணர்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அபுதாபி முழுவதும் அலங்கார விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளதாக நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (Department of Municipalities and Transport – DMT) தெரிவித்துள்ளது.

ரமலானின் போது பயன்படுத்தப்பட்ட அலங்கார விளக்குகளுடன் சேர்த்து அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா பகுதியில் உள்ள முனிசிபல் குழுக்கள் ஈத் விளக்குகளை நிறுவி ஒளிரச் செய்துள்ளன. மேலும், பொருத்தப்பட்ட மின்விளக்குகளில் ஈத் பிறை, மற்றும் ‘ஈத் முபாரக்’ உள்ளிட்ட ஈத் வாழ்த்துக்கள் அடங்கிய வடிவமைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பண்டிகையின் போது, கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சி உணர்வை மேம்படுத்த அபுதாபி இந்த மின் விளக்குகளை நிறுவி வருகிறது. குறிப்பாக, அபுதாபியின் கார்னிச் ஸ்ட்ரீட், கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட் மற்றும் நகரின் முக்கிய பாலங்கள் மின்னும் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், நகரம் முழுவதும் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள அலங்காரங்கள் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரத்துடன் பொருத்தப்பட்டிருப்பதாகவும், வானிலைக்கு ஏற்றார் போல் இருக்கும் எனவும் குடியிருப்பாளர்களுக்கு DMT உறுதியளித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!