அமீரக செய்திகள்

துபாய் குடியிருப்பாளர்கள் ​​சாதாரண டாக்ஸி கட்டணத்தில் இனி டெஸ்லாவில் பயணிக்கலாம்..!!

துபாயில் விறுவிறுவென செல்லும் டெஸ்லா டாக்ஸிகளில் பயணிக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆம், ஏப்ரல் 2023 இல் துபாய் டாக்ஸிக் குழுவில் 269 டெஸ்லா மாடல் 3 கார்களை சேர்க்க அரேபியா டாக்ஸி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், டெஸ்லா டாக்ஸியில் பயணிக்க சாதாரண டாக்ஸி சேவைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களே போதுமானது எனபது குறிப்பிடத்தக்கது.

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), எதிர்வரும் 2027க்குள் எமிரேட்டில் உள்ள அனைத்து டாக்ஸிகளையும் நூறு சதவீதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைப்ரிட், எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் வாகனங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே, முதற்கட்ட முயற்சியாக கடந்த ஆண்டு ஜூலையில், சோதனை அடிப்படையில் துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனில் டெஸ்லா மாடல் 3 ஐ RTA சேர்த்துள்ளது. மேலும், 2017 ஆம் ஆண்டு துபாய் டாக்ஸி லிமோசின் ஃப்ளீட்டின் ஒரு பகுதியாக 172 டெஸ்லாக்களை முதன்முதலில் அறிமுகம் செய்தது. தற்போது சுமார் 6000 டாக்ஸிகளுடன் அமீரகம் முழுவதும் இயங்கிவரும் அரேபியா டாக்ஸி சாதாரன டாக்ஸிகளின் கட்டணத்திற்கே டெஸ்லா கார்களை பயண்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அரேபியா டாக்ஸி நிறுவன குழுமத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவரான ஷேக் மஜித் பின் ஹமத் அல் காசிமி என்பவர் கூறுகையில், அரேபியா டாக்ஸியின் துபாய் ஃப்ளீட்டல் உள்ள 83 சதவீத கார்கள் தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைப்ரிட் எஞ்சின் தொழில்நுட்பத்துடன் இயங்கி வரும் வேளையில், எஞ்சியிருக்கும் வாகனங்களை முழுவதுமாக மின்சார கார்களாக மாற்றுவதற்கான ஒரு மூலோபாய திட்டத்தில் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவித்திள்ளார்.

அவற்றுடன் எதிர்காலத்தில் ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது. மேலும், டெஸ்லா மற்றும் பல எலக்ட்ரிக் கார் உற்பத்தியாளர்களுடனான தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், அதன் வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து சேவைகளை வழங்கவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது என்று ஷேக் மஜித் கூறியுள்ளார்.

இதற்கிடையில், RTA இன் பொது போக்குவரத்து முகமையின் CEO அஹ்மத் பஹ்ரோசியன் அவர்கள் பேசிய போது, சுற்றுச்சூழலின் நன்மைக்காக ஹைபிரிட் வாகனங்களை அறிமுகப்படுத்த துபாய் அரசாங்கத்தின் முன்முயற்சியை மேம்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை பங்களிக்கும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!