அமீரக செய்திகள்

UAE: பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி..!! 3 நாள் சூப்பர் விற்பனையை அறிவித்துள்ள துபாய் !!

துபாயில் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடியை பெறுவதற்கான விற்பனையானது அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின் படி, துபாயில் 3 Day Super Sale (3DSS) எதிர்வரும் மே 26 தொடங்கி 28 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும், நகரம் முழுவதும் உள்ள முழுவதும் உள்ள கடைகள் மற்றும் மால்களில் பிராண்டுகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, துபாய் ஃபெஸ்டிவல் மற்றும் ரீடெயில் நிறுவனத்தால் (Dubai Festivals and Retail Establishment DFRE) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சீசனல் நிகழ்வில், ஃபேஷன், அழகு, வாழ்க்கை முறை, ஃபர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பலவற்றிற்கான ப்ரொமோஷன்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் தள்ளுபடி நிகழ்வில், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்திஃப், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மெய்செம் & சிட்டி சென்டர் அல் ஷிந்தகா, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், துபாய் ஃபெஸ்டிவல் பிளாசா, நக்கீல் மால், இபின் பதூதா, சர்க்கிள் மால், மெர்கடோ, டவுன் சென்டர், தி பீச், ப்ளூவாட்டர்ஸ், சிட்டி வாக் மற்றும் தி அவுட்லெட் வில்லேஜ் ஆகிய ஷாப்பிங் மையங்கள் ஆகியவை பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் KIKO Milano, Sephora, Bath & Body Works, 1915 by Ahmed Seddiqi, Rivoli, Homes R Us, Ikea, Jashanmal, Marks & Spencer, Lacoste, Better Life, Sharaf DG, Aldo and Al Jaber Optical உள்ளிட்ட பிரபலமான பிராண்டுகளில் தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மஜீத் அல் ஃபுட்டைம் அதன் SHARE rewards உறுப்பினர்களில் 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவிடும் நபர்களுக்கு 1 மில்லியன் புள்ளிகளை வெல்லும் வாய்ப்பு வழங்குவதாகவும் அறிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!