அமீரக செய்திகள்

UAE: சாலையின் தடுப்பில் மோதிய கார்!! கவனச் சிதறலால் ஏற்பட்ட கடும் விபத்து..!! வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறை எச்சரிக்கை….!!

அபுதாபி சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட அதிபயங்கரமான கார் விபத்து ஒன்று அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதில் பதிவான வீடியோ காட்சிகளில் ஒரு கார் மற்றொரு வாகனம் மீது மோதிய பிறகு சாலையின் தடுப்பில் மோதியதைக் காணலாம். இந்த வீடியோ காட்சிகளைப் பகிர்ந்த அபுதாபி காவல்துறை ஓட்டுநர்களை எச்சரித்துள்ளது.

மேலும், சாலையில் வாகனம் ஓட்டும்போது கவனம் சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அபுதாபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு கவனச் சிதறல்களால் கடுமையான விபத்துக்கள் நடக்கக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் எப்போதும் சாலையில் தங்கள் கண்களை வைத்திருக்குமாறு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை புதிய எச்சரிக்கையில் நினைவூட்டியுள்ளனர்.

காவல்துறை பகிர்ந்த வீடியோவில், சாலையின் வலதுபுறப் பாதையில் ஒரு கார் வழக்கத்தை விட சற்று மெதுவாக நகர்வதையும், திடீரென்று, மற்றொரு வாகனம் முதல் காரின் பின்புற பம்பரை நோக்கி வேகமாக வந்து மோதுவதையும் காணலாம்.

விபத்தின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்ததால், முன்னால் சென்ற கார் சாலைத் தடுப்பில் மோதி, கட்டுப்பாட்டை இழந்து சுழன்றதையும், அப்போது அங்கு புழுதி ஏற்பட்டதையும் வீடியோவில் பார்க்கலாம்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம், இந்த வீடியோ சாலைகளில் செல்லும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவது மற்றும் பிற விஷயங்களைச் செய்வதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றிய எச்சரிக்கையாக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

ஆகவே, வாகனம் ஓட்டும்போது மொபைல் போனில் பேசுவதோ, செல்ஃபி எடுக்கவோ, சமூக வலைதளங்களை பயன்படுத்தவோ கூடாது என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், அலட்சியமாக கவனச் சிதறலுடன் வாகனம் ஓட்டினால் 800 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு போக்குவரத்து புள்ளிகள் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!