அமீரக செய்திகள்

மூன்றே மாதங்களில் 27.3 மில்லியன் டாக்ஸி பயணங்கள்..!! துபாயின் பொருளாதாரச் செழிப்பை பிரதிபலிக்கும் டாக்ஸி துறை…!!

துபாயில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது மூன்றே மாதங்களில் டாக்ஸி பயணங்களின் எண்ணிக்கை 27.3 மில்லியனாக பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நிலையான போக்கில் உயர்ந்து 6 சதவீதத்தை எட்டிய வலுவான வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து RTAவின் பொது போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் அடெல் ஷக்ரி என்பவர் கூறுகையில், இதே கால கட்டத்தில் கடந்த 2022 இல் 26 மில்லியன் டாக்ஸி பயணங்களும், 2021 இல் 19.2 மில்லியன் பயணங்களும், 2020 இல் 23.3 மில்லியன் பயணங்களும் மற்றும் 2019 இல் 26.1 மில்லியன் பயணங்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் துபாயின் டாக்ஸி துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பாதையைக் கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் துறையானது சமீபத்திய ஆண்டுகளில் அதன் மிக உயர்ந்த வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், குறிப்பாக இ-ஹெய்ல் சேவைகள், ஸ்மார்ட் வாடகை சேவைகள் மற்றும் ஹாலா டாக்ஸி சேவைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவாகியுள்ள டாக்ஸி சேவைகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் விகிதங்களின் பகுப்பாய்வு, துபாயின் செழிப்பான பொருளாதாரத்தை பிரதிபலிப்பதாகவும், இது முதலீடு மற்றும் சுற்றுலாவுக்கான முக்கிய உலகளாவிய மையமாக அதன் நிலையை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!