அமீரக செய்திகள்

UAE: போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம்!! பங்கேற்பாளர்களுக்கு மஹ்சூஸ் அறிவித்த எச்சரிக்கை…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல மஹ்சூஸ் ரேஃபிள் டிரா சமீபத்தில் ஒரு முக்கிய எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் மஹ்சூஸ் பெயரைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடி நடத்தப்படுவதாக குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதற்கு வெளியில் உள்ள மற்ற நாடுகளில் இருந்து Mahzooz டிராவில் பங்கேற்பவர்கள் எண்களின் தொகுப்பைப் பொருத்துவதன் மூலமாகவோ அல்லது ரேஃபிள் டிரா மூலமாகவோ ஒவ்வொரு வாரமும் பணப் பரிசுகளை வெல்லலாம். மஹ்சூஸ் டிரா இதுவரை 45 கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது.

இத்தகைய மஹ்சூஸ் டிராவின் அதிகாரப்பூர்வ தளத்தை பிரதிப்படுத்தும் சில போலியான இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக அதன் பங்கேற்பாளர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. மேலும், இவை பொதுவாக ஹேக்கர்கள் மற்றும் சைபர் கிரிமினல்களால் ஃபிஷிங் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சில மோசடி இணையதளங்கள் மஹ்சூஸில் சேர்வதாக நினைத்து அவர்களின் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடும் மக்களின் வங்கி கணக்கு சான்றுகள் உட்பட பல தகவல்களை கைப்பற்றுவதாக மஹ்சூஸ் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்த அதே வேளையில், பங்கேற்பாளர்கள் மோசடிகளில் இருந்து விலகி நிற்க சில குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரேஃபிள் டிரா தளம் பகிர்ந்துள்ளது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

>> மஹ்சூஸின் ஆலோசனையின்படி, https://www.mahzooz.ae/ என்ற அதிகாரப்பூர்வ Mahzooz இணையதளத்தை மட்டுமே பங்கேற்பாளர்கள் பயன்படுத்தவும். வேறு எந்த இணையதளங்களையும் பார்வையிடவோ அல்லது அதில் தகவல்களை உள்ளிடுவதோ வேண்டாம்.

>> இணைப்பைக் கிளிக் செய்வதற்கு முன் இணையதள URLஐ இருமுறை சரிபார்க்கவும்.

>> அதுபோல, https://www.mahzooz.ae/ இந்த இணையதளத்தைத் தவிர வேறு எந்த இணையதளத்திலும் கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் அல்லது நிதித் தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் வழங்க வேண்டாம்.

அத்துடன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு சேனலஐ தவிர்த்து மற்ற எதிலுமே முக்கியமான தகவல்களை ஒருபோதும் கேட்காது என்பதையும் இந்த தளம் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!