அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று வெப்பநிலை 27ºC வரை பதிவாகும்.. வானம் மேகமூட்டமாக இருக்கும்.. மிதமான காற்று வீசும்.. NCM அறிக்கை..!!

அமீரகத்தில் இன்றைய தினம் ஜூன் 30 ம் தேதி, ஓரிரு பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் குறைந்த மேகங்கள் தோன்றும் என்றும், மலைப்பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்றும் அறிவித்துள்ளது.

அதேசமயம், பகல் நேரங்களில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான காற்று வீசுவதை உணரலாம் என்றும், ஒரு சில நேரங்களில் தூசியுடன் கூடிய காற்று வீசக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அபுதாபியில் 42ºC ஆகவும், துபாயில் 41ºC ஆகவும் வெப்பநிலை உயரலாம்.

இருப்பினும், அபுதாபியில் குறைந்த வெப்பநிலை 30ºC ஆகவும், துபாயில் 32ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 27ºC ஆகவும் இருக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது. அதேவேளை, அபுதாபி மற்றும் துபாயில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 25 முதல் 70 சதவீதம் வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் கடலின் சீற்றம் சற்று குறைவாகக் காணப்படும் என்றும் அமீரக தேசிய வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!