அமீரக செய்திகள்

அமீரக சாலைகளில் முந்திச் செல்ல அனுமதிக்கப்படாத ஆறு இடங்கள் மற்றும் முந்திச் செல்வதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நெடுஞ்சாலையில் அல்லது இருவழிச் சாலைகளில் வாகனம் ஓட்டினாலும், உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்தை முந்திச் செல்ல முயற்சிக்கும்போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. ஏற்கனவே அஜ்மான் காவல்துறையின் சமீபத்திய பிரச்சாரத்தில் இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

UAE போக்குவரத்துச் சட்டத்தின் படி, சாலைகளில் வாகனங்களை முந்திச் செல்வது தொடர்பாக பின்வரும் ஐந்து அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

1. தவறாக முந்திச் செல்லுதல் – சாலையில் உங்களுக்கு முன்னால் உள்ள காரை ஆபத்தான முறையில் தவறாக முந்திச் சென்றால், 600 திர்ஹம் அபராதமும் 6 பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும்.

2. சாலையின் ஹார்டு ஷோல்டரிலிருந்து முந்துதல் – சாலையின் வலதுபுறத்தில் உள்ள ஹார்டு ஷோல்டரிலிருந்து முந்தினால், 1,000 திர்ஹம் அபராதத்துடன் 6 பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும்.

3. தடைசெய்யப்பட்ட பாதைகளில் அல்லது பகுதிகளுக்குள் கனரக வாகனம் முந்திச் சென்றால், 1,000 திர்ஹம் அபராதமும் 4 பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும்.

4. தடைசெய்யப்பட்ட இடத்திலிருந்து முந்திச் சென்றால், 600 திர்ஹம் விதிக்கப்படும்.

எந்தெந்த இடங்களில் முந்திச் செல்ல அனுமதி இல்லை?

சாலைகளில் வரையப்பட்டுள்ள லேன் அடையாளங்களைப் பார்த்தால், நீங்கள் முந்திச் செல்ல அனுமதிக்கப்படுகிறீர்களா இல்லையா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) படி, சாலைகளில் நீங்கள் கவனிக்க வேண்டியவை:

சாலையின் நடுவே நேரான ஒற்றை கோடு:

மேலே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, சாலையின் நடுவே நேரான கோடு இருந்தால், இரு திசைகளிலிருந்தும் வரும் வாகனங்கள் வேறொரு வாகனத்தை முந்திச் செல்லவோ அல்லது பாதையை மாற்றவோ சாலையின் நடுவே உள்ள கோட்டை கடக்கக் கூடாது.

சாலையின் நடுவே நேரான இரட்டை கோடுகள்:

நீங்கள் எப்போதும் சாலையில் வரையப்பட்டுள்ள இந்த கோடுகளின் வலது பக்கம் மட்டுமே செல்ல வேண்டும். சாலையின் மையத்தில் உள்ள இரட்டை மஞ்சள் கோடுகளை கடப்பதற்கு அனுமதி கிடையாது. பெரும்பாலும் இந்த கோடுகளை, எதிர் திசையில் இருந்து வரும் போக்குவரத்தைப் பார்க்க முடியாத வளைவான பாதைகளில், குறிப்பாக அபாயகரமான பகுதிகளில் பார்க்கலாம்.

ஒரு பக்கம் நேரான மறுபுறம் விடுபட்ட கோடுகள்:

சாலையில் விடுபட்ட கோடுகள் உங்கள் பக்கம் இருந்தால், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல அல்லது சாலையில் நுழைய அல்லது வெளியேற இந்த கோடுகளை கடக்கலாம். மாறாக, நேரான கோடு உங்கள் பக்கத்தில் இருந்தால், இந்த கோடுகளை நீங்கள் கடக்கக்கூடாது.

அதேபோன்று, நீங்கள் வலப்புற பாதையில் முந்திச் செல்ல கூடாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதாவது உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் வலது பாதைக்குத் திரும்பும் வரை காத்திருந்து, இடதுபுறமாகவே முந்திச் செல்ல வேண்டும். அதுபோல, உங்களை யாராவது முந்திச் சென்றால், RTA படி, நீங்கள் வேகத்தைக் குறைத்து வலதுபுறத்தில் செல்ல வேண்டும்.

சாலைகளில் கடக்கக்கூடாத இடங்கள்:

  1. சாலை தெளிவாகத் தெரியாத போது.
  2. எதிர் திசையில் போக்குவரத்தின் இயக்கம் உங்களைப் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்காத போது.
  3. இண்டர்செக்சன் மற்றும் ரவுண்டானாக்களை கடக்கும் போது.
  4. போக்குவரத்து தடையின் இயக்கம் அல்லது நிறுத்த அடையாளம் காரணமாக வாகனங்கள் நிறுத்தப்படும் போது.
  5. வளைவுகள், மலைகளின் முகடுகள், வழுக்கும் சாலைகள், பாதசாரிகள் கடக்கும் பாதைகள் மற்றும் நீண்ட கோடுகள் கொண்ட சாலைகள்.
  6. வாகனங்களை முந்திச் செல்வதை தடுக்கும் அடையாளங்கள் நிறுவப்பட்ட இடங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!