அமீரக செய்திகள்

UAE: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!! 16 ஃப்ளாட், 13 வாகனங்கள் எரிந்து நாசம்..

அஜ்மானில் ஷேக் கலீஃபா பின் சையத் தெருவில் உள்ள அல் நுவைமியா பகுதியில் (3) அமைந்துள்ள 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 16 குடியிருப்புகள் எரிந்து நாசமானதுடன் 13 வாகனங்கள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அஜ்மான் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், குடிமைத் தற்காப்பு படையினரும் காவல்துறையினரும் விரைந்து செயல்பட்டு எந்த காயமும் இன்றி அனைத்து குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். இறுதியாக, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், தீ விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறியும் முயற்சியில் புலனாய்வுக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, கட்டிட உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று காவல்துறை நடவடிக்கைகளின் இயக்குனர் ஜெனரல் பிரிகேடியர் அப்துல்லா சைஃப் அல் மத்ரூஷி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அஜ்மான் சிவில் டிஃபென்ஸ் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் இலான் இசா அல் ஷம்சி அவர்கள் கூறுகையில், ஷார்ஜா சிவில் டிஃபென்ஸ் மற்றும் உம் அல் குவைனின் தீயணைக்கும் குழுவினருக்கு அல் ரஷிதியா மையத்தின் குழுக்கள் தலைமை தாங்கியதாகவும், சேதம் பொருள் இழப்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் எடுத்துக்கட்டியுள்ளார்.

அதிர்ஷடவசமாக, உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், தீ அணைக்கப்பட்டதும் குளிரூட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!