ADVERTISEMENT

ஆரோக்கியமாக இருந்தால் அதிரடிப் பரிசுத் தொகை!! துபாய் சுகாதார ஆணையம் குடியிருப்பாளர்களுக்கு விடுத்த சவால்…

Published: 7 Aug 2023, 8:48 PM |
Updated: 7 Aug 2023, 9:08 PM |
Posted By: Menaka

துபாயில் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் பணத்தை வெல்லலாம் என்று ஒரு போட்டி நடைபெற உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

ADVERTISEMENT

ஆனால் அது உண்மைதான். துபாயில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘Health and Happiness’ போட்டியில் பதிவு செய்ய குடியிருப்பாளர்களுக்கு துபாய் சுகாதார ஆணையம் (Dubai Health Authority-DHA) அழைப்பு விடுத்துள்ளது. இதில் பல்வேறு போட்டிகள் மற்றும் உடற்பயிற்சி சவால்கள் அடங்கும்.

இந்த போட்டியை STEPPI பிளாட்பார்ம் மற்றும் Aster கிளினிக்குகளுடன் இணைந்து ஆணையம் செயல்படுத்துவதாக DHA இன் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையின் சுகாதார மேம்பாடு மற்றும் கல்விப் பிரிவின் தலைவர் டாக்டர் ஹென்ட் அல் அவாதி (Hend Al Awadhi) தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

எப்போதும், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையில், உடல்நலனை பாதுகாப்பதற்கும் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்கும் ஆரோக்கியமான முறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த போட்டியின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் இறுதி வரை ஐந்து மாதங்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த போட்டியில் வெற்றி பெறும் 30 ஆண் மற்றும் பெண் வெற்றியாளர்களுக்கு சமமாக வழங்கப்படும் 240,000 திர்ஹம் மதிப்பிலான ரொக்க மற்றும் பொருள் பரிசுகளை ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நிபந்தனைகள்:

இந்த போட்டியில் பங்கேற்பதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன;

  1. பங்கேற்பாளர்கள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்
  2. அவர்கள் உடல் நலனுக்கு முரணான எந்த சுகாதார நிலைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது.

பங்கேற்பது எப்படி?

போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் மொபைலில் STEPPI அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து தங்களின் அக்கவுண்டை உருவாக்கி இந்த சவாலில் பங்கேற்கலாம்.