ADVERTISEMENT

அமீரகத்தில் குறையும் வெப்பநிலை.. வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்..!! வானிலை மையம் தகவல்..!!

Published: 2 Sep 2023, 1:14 PM |
Updated: 2 Sep 2023, 1:22 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய தினம் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில பகுதிகளில் வெப்பம் சற்று தணியும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், கிழக்கு கடற்கரை பகுதியில் பிற்பகல் நேரத்தில் மழையை உருவாக்ககூடிய வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் தூசி மற்றும் மணலுடன் கூடிய லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை முறையே 39ºC மற்றும் 32ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 21ºC ஆகவும் இருக்கும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் நிலைமை சில சமயங்களில் கரடுமுரடானதாகவும், சற்று மிதமானதாகவும் இருக்கும் என்று NCM தெரிவித்துள்ளது.