ADVERTISEMENT

அபுதாபி பிக் டிக்கெட்டில் 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை தட்டிச்சென்ற இந்தியர்..!!

Published: 4 Oct 2023, 2:02 PM |
Updated: 4 Oct 2023, 3:01 PM |
Posted By: Menaka

அபுதாபி பிக்டிக்கெட்டின் ரேஃபிள் டிரா சீரிஸ் 256-இல் கத்தாரில் வசித்து வரும் இந்தியர் 15 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

கத்தாரின் தலைநகரான தோஹாவில் வசிக்கும் முஜீப் தேக்கே மேட்டியேரி (Mujeeb Thekke Mattieri) என்ற இந்தியர், கடந்த செப்டம்பர் 27 அன்று வாங்கிய 098801 என்ற எண் கொண்ட டிக்கெட்டுடன் 15 மில்லியன் திர்ஹம் பரிசை வெல்லும் அதிர்ஷ்டசாலி ஆகியுள்ளார்.

ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது வெற்றி குறித்து அவரிடம் தெரிவிக்க முடியவில்லை என்று ரேஃபிள் டிராவின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களான ரிச்சர்ட் மற்றும் பௌச்ரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தொடர்ந்து அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

பிக்டிக்கெட் வெளியிட்ட ப்ரோமோஷன் அறிவிப்பின்படி, இந்த மாதம் முழுவதும், வரவிருக்கும் லைவ் டிராவிற்கான டிக்கெட்டுகளை வாங்கும் ஒவ்வொருவரும் நவம்பர் 3 அன்று 20 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேலும், பிக்டிக்கெட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் தானாகவே தினசரி இ-டிராவில் நுழைவார்கள், அதில் ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு நாளும் 24-காரட் தங்கக் கட்டியை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அபுதாபி பிக்டிக்கெட் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த ரேஃபிள் டிராவில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் வாங்கலாம் அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.