ADVERTISEMENT

UAE: போலீஸ் முன்பு தாறுமாறாக ஸ்டண்ட் செய்த வாகன ஓட்டி!! உடனடியாக கைது செய்து 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த காவல்துறை….!!

Published: 27 Oct 2023, 9:40 AM |
Updated: 27 Oct 2023, 9:44 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆபத்தான முறையிலும் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இருந்தபோதிலும் அவ்வப்போது ஒரு சிலர் இந்த குற்றம் புரிந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது மற்றுமொரு வாகன ஓட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ராஸ் அல் கைமா எமிரேட்டில் போலீஸ் ரோந்து வாகனத்திற்கு முன்பாக ஒரு வாகன ஓட்டி காரில் ஸ்டண்ட் செய்தததால் அவர் கைது செய்யப்பட்டதாக ராஸ் அல் கைமா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் சாலைப் பயனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவருக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக RAK காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனர் கர்னல் டாக்டர் முகமது அல் பஹார் அவர்கள் பேசுகையில், காவல்துறையின் முன் பொறுப்பற்ற முறையில் கார் ஓட்டும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளதாகவும், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் வாகன ஓட்டியின் இந்த நடத்தை மிகவும் ஆபத்தானதாகவும், நாட்டின் காவல்துறை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காததாகவும் கருதப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாக ராஸ் அல் கைமா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுவைமியின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு தேடல் மற்றும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். இறுதியாக, அதிகாரிகள் காரின் இருப்பிடம் மற்றும் அதன் ஓட்டுநரின் அடையாளத்தை கண்டறிந்து வாகன ஓட்டியை கைது செய்ததாகவும் கர்னல் அல் பஹார் விவரித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், எமிரேட்டில் விதிமுறைகளை மீறும் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவமரியாதை செய்யும் எவருக்கும் கடுமையான தண்டனைகளை விதிக்க ராஸ் அல் கைமா காவல்துறை தயங்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel