ADVERTISEMENT

UAE: பார்க்கிங் பகுதியில் 125,000 திர்ஹம்ஸை மறந்து வைத்து விட்டு போன இந்தியர்.. திருடுபோன பணத்தை உடனடியாக மீட்டு தந்த காவல்துறைக்கு குவியும் பாராட்டு..!!

Published: 8 Nov 2023, 7:11 PM |
Updated: 8 Nov 2023, 7:12 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர் பார்க்கிங் பகுதியில் மறந்து விட்டுச் சென்ற 125,000 திர்ஹம் கொண்ட பை திருடுபோனதை அடுத்து துரிதமாக செயல்பட்டு விரைவில் பணத்தை மீட்டுக்கொடுத்த காவல்துறையின் நடத்தையை பலரும் பாராட்டி வருகின்றனர். குடியிருப்பாளரின் பணப்பையானது திருடப்பட்டதாக புகார் அளித்த பிறகு அஜ்மான் காவல்துறையினர் மூன்று மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அஜ்மான் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, புகார்தாரர் பார்க்கிங் பகுதியில் தனது நிறுத்தப்பட்ட காரின் முன் பையை மறந்து விட்டுச் சென்றதும், அதைப் பார்த்த திருடன், பையை எடுத்துத் தப்பிச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை பகிர்ந்துள்ள வீடியோவில், அலுவலகத்தில் வேலை முடிந்ததும், ரஷிதியாவில் (Rashidiya) உள்ள தனது குடியிருப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் காரை பார்க்கிங் செய்ததாகவும், ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காக பணப்பையை மற்றொரு காரின் மேல் வைத்ததாகவும் பணத்தைப் பறி கொடுத்த இந்தியர் புகார் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய அவர், “பணத்தை மறந்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன். வீட்டிற்கு வந்தவுடன் எனது பையை காணவில்லை என்பது நியாபகம் வந்தது. உடனடியாக கீழே விரைந்து சென்று பார்த்தேன். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. எனவே, எனது பை திருடப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்தேன்” என்று சம்பவத்தை விவரித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான புகாரைப் பெற்ற காவல்துறையினர், உடனடியாக சந்தேக நபரை அடையாளம் கண்டு, சில மணிநேரங்களில் அவர் வசித்த இடத்திலிருந்து பையை மீட்டுள்ளனர். இது குறித்து இந்தியர் மேலும் கூறியதாவது: “நான் புகார் அளித்த மூன்று மணி நேரத்திற்குள், அஜ்மான் காவல்துறையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, அவர்கள் எனது பையை மீட்டுவிட்டதாக தெரிவித்தனர்” என்றார்.

ADVERTISEMENT

அஜ்மான் காவல்துறையினரின் இந்த விரைவான நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel