அமீரகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு பெய்யவிருக்கும் மழை..!! எச்சரிக்கையை வெளியிட்ட வானிலை மையம்….
ஐக்கிய அரபு அமீரகத்தில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வருகின்ற நவம்பர் 15 முதல் 18 வரை தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நாட்டில் மழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.
NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், எதிர்வரும் நவம்பர் 15 புதன்கிழமையன்று நாட்டில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அடுத்த நாட்களான வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும், சனிக்கிழமை வானிலை சீராகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது மழைக்காலம் என்பதால், நாட்டில் வெப்பநிலை படிப்படியாக தணிந்து வருவதை குடியிருப்பாளர்கள் உணரலாம். அந்தவகையில், இன்று (திங்கட்கிழமை, நவம்பர் 13) இந்த பருவத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக NCM தெரிவித்துள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeகுறிப்பாக, அல் அய்னில் உள்ள ரக்னாவில் (Rakna) இன்றைய தினம் 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேசமயம், துபாயின் அல் மர்மூம் (Al Marmoom) மற்றும் லஹ்பாப் (Lahbab) உள்ளிட்ட பிற பகுதிகளில், 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை வெப்பநிலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அமீரகம் தற்போது மழைக்காலத்தின் நடுவில் இருந்தாலும், மழை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது என்று NCM நிபுணர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரை தொடர்ச்சியாக கனமழை, ஆலங்கட்டி மழை பெய்து வந்த நிலையில், ஆங்காங்கே பள்ளத்தாக்குகள் நிறைந்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel