ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று மேகமூட்டமான வானிலை நிலவும்..!! சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக NCM தகவல்…

Published: 1 Nov 2023, 10:52 AM |
Updated: 1 Nov 2023, 10:52 AM |
Posted By: Menaka

கடந்த இரண்டு வாரங்களாக ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்து வந்த நிலையில், நாட்டில் இன்றைய வானிலை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், அமீரகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழையை உருவாக்கக்கூடிய சில வெப்பச்சலன மேகங்கள் உருவாகலாம் என்று தெரிவித்துள்ளது.

NCM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்பதால் தூசி நிறைந்த வானிலையை எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT

அத்துடன், அபுதாபி மற்றும் துபாயில் இன்றைய வெப்பநிலை முறையே அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இரண்டு எமிரேட்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் மற்றும் 26 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று மையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel