அமீரக செய்திகள்

அமீரகத்தில் தேசிய தின வானவேடிக்கையை எங்கெங்கே பார்க்கலாம்? உங்களுக்கான வழிகாட்டி இதோ…

ஐக்கிய அரபு அமீரகம் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதி அதன் 52வது தேசிய தினத்தை பல்வேறு நிகழ்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ விழாவுடன் கொண்டாட உள்ளது. அந்தவகையில், தேசிய தினத்தன்று நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்டிடங்களில் அமீரகக் கொடிகள் பறக்கவிடப்படும். அத்துடன் முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் அமீரக கொடியில் உள்ள வர்ணங்களால் ஒளிரூட்டப்பட்டு வண்ணமயமாக காட்சியளிக்கும்.

மேலும், நாட்டின் பல்வேறு எமிரேட்களில் உள்ள அடையாளங்கள் மற்றும் ஓய்வு இடங்களில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு தேசிய தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். எனவே, குடியிருப்பாளர்கள் தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இந்த விடுமுறையை எங்கெங்கே அனுபவிக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

அபுதாபி:

1. யாஸ் ஐலேண்ட் – யாஸ் பே வாட்டர்ஃபிரண்ட்: இரவு 9 மணி, டிசம்பர் 2

யாஸ் ஐலேண்டை நோக்கி படையெடுக்கும் பார்வையாளர்கள் பகலில் பிரபலங்களின் நேரடி நிகழ்சிகளைக் கண்டுகளிக்கலாம் மற்றும் இரவில் வானம் வானவேடிக்கையால் ஒளியூட்டப்படும் திகைப்பூட்டும் காட்சியையும் பார்த்து ரசிக்கலாம்.

2. அல் மரியா ஐலேண்ட் – தி ப்ரோமேனாடு (The Promenade): இரவு 9 மணி, டிசம்பர் 2-3

இந்த பிரபலமான இடத்தில் வானவேடிக்கை மற்றும் வாட்டர் ஷோ என தேசிய தினத்தின் உணர்வை பிரமிக்க வைக்கும் வகையில் கொண்டாடப்படும். டிசம்பர் 2 முதல் 3 வரை இரவு 9 மணிக்கு, கலேரியா அல் மரியா ஐலேண்டின் நடைபாதையில் இதனை பார்த்து ரசிக்கலாம்.

3. ஷேக் சையத் ஃபெஸ்டிவல், அல் வத்பா: டிசம்பர் 2-3 (கொண்டாட்டங்கள் மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை)

இங்கு பார்வையாளர்கள் நேரடி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பல செயல்பாடுகள் மற்றும் ஆச்சரியங்களை அனுபவிக்கலாம். மேலும், எமிரேட்ஸ் ஃபவுன்டைனும் அமீரக கொடியின் வண்ணங்களில் அலங்கரிக்கப்படும். இரவு நேரங்களில் வானவேடிக்கையும், ட்ரோன் நிகழ்ச்சிகளும் திங்கு வருபவர்களை பிரம்மிக்கச் செய்யும்.

4. எமிரேட்ஸ் பேலஸ் மாண்டரின் ஓரியண்டல்: ஹோட்டல் கடற்கரை / அபுதாபி கார்னிச்: இரவு 9 மணி, டிசம்பர் 2

அமீரகத்தின் தேசிய தினத்தைக் முன்னிட்டு அபுதாபியின் சின்னமான ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கும் கொண்டாட்டங்களின் வரிசையில், பைரோடெக்னிக்ஸ் மற்றும் லைட் ஷோ போன்ற நிகழ்ச்சிகளும் அடங்கும்.

துபாய்:

1. குளோபல் வில்லேஜ் – ஃபயர் ஒர்க்ஸ் அவென்யூ: டிசம்பர் 1-2, இரவு 9 மணி

துபாயில் உள்ள பிரபலமான குடும்ப இலக்கு, டிசம்பர் 1 முதல் 3 வரையிலான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கருப்பொருள் செயல்பாடுகளால் நிரம்பிய பொழுதுபோக்கு பட்டியலை ஒன்றாக இணைத்துள்ளது.

ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு நடைபெறும் குளோபல் வில்லேஜின் வானவேடிக்கை நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புகின்றனர். எனவே, டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பார்வையாளர்கள் இங்கே அந்தக் காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்.

இது தவிர துபாயில் புளூவாட்டர்ஸ் முதல் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, அல் சீஃப் மற்றும் JBRஇல் உள்ள தி பீச் வரை துபாயில் உள்ள பல பிரபலமான இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அமீரகத்தின் தேசிய தினத்தை பட்டாசுகளுடன் கொண்டாடி வருகிறது. ஆனால், இந்த ஆண்டுக்கான திட்டங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஷார்ஜா:

ஷார்ஜா எமிரேட்டில் தேசிய தின நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் 3 வரை நடைபெறும். மேலும், முக்கிய நிகழ்வு மற்றும் திறப்பு விழா ஷார்ஜா தேசிய பூங்காவில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ளது. இதில் நாடக நிகழ்ச்சிகள், ஒர்க் ஷாப்புகள், ஊடாடும் போட்டிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் அடங்கும்.

அல் தைத், கோர் ஃபக்கான், அல் படேஹ் பகுதி, கல்பா, ஹெரிட்டேஜ் வில்லேஜ் ஆகிய இடங்களிலும் கொண்டாட்டங்கள் வரிசையாக உள்ளன. அல் முதம் பகுதி அதன் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வானவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!