துபாயில் புதிதாக அமைக்கவிருக்கும் தீவு.. 4.4 பில்லியன் திர்ஹம் செலவில் திட்டமிடப்பட்டுள்ள ‘The Island’..
துபாயில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது புதிதாக ‘The Island’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3.5 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் 4.4 பில்லியன் திர்ஹம் செலவில் ‘தி ஐலேண்ட்’ எனப்படும் வாட்டர்ஃப்ரண்ட் திட்டம் 2028-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தீவில் MGM, Bellagio மற்றும் Aria போன்ற சொகுசு ஹோட்டல் பிராண்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திட்டத்தின் தரவு நிறுவனமான BNC நெட்வொர்க் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஜுமேரா பீச் ஃப்ரண்டில், உம் சுகீம் 2 இல் உள்ள இந்த மேம்பாட்டு திட்டத்தில் 1,000 ஹோட்டல் அறைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், 10 வில்லாக்கள் மற்றும் F&B விற்பனை நிலையங்கள் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், தீவின் நடுவில் உள்ள 110 மீட்டர் உயரமுள்ள ஒரு பொழுதுபோக்கு கோபுரத்தில் 300 விருந்தினர்கள் அமர்ந்து 3D இல் நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் பார்க்க முடியும். அதுமட்டுமில்லாமல், உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள், பிசினஸ் லாஞ்ச், நீரூற்றுகள் மற்றும் செயற்கை நீர்வீழ்ச்சிகள் ஆகியவை இந்த வளர்ச்சியில் இடம்பெற உள்ளதாக் கூறப்படுகிறது.
அதேபோல், நிகழ்ச்சிகள், மாநாடுகள், திருவிழாக்கள் மற்றும் திருமணங்களை நடத்தக்கூடிய 800 இருக்கைகள் கொண்ட தியேட்டர் மற்றும் கடல் ஓய்வு சேவைகளை வழங்கும் பீச் கிளப் போன்றவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தீவைச் சுற்றியுள்ள 1.2 கிமீ கார்னிச்சில் கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளும், ‘கேவ் ஆஃப் வொண்டர்ஸ்’ என்று அழைக்கப்படும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கேம்களும் இருக்கும்.
இத்தகைய ஆடம்பரமான தி ஐலண்டிற்கான முக்கிய ஒப்பந்தம் சீனா ஸ்டேட் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் மிடில் ஈஸ்ட் நிறுவனத்திற்கு சொத்து மேம்பாட்டாளர் வாஸ்லால் (Wasl) வழங்கப்பட்டுள்ளதாக BNC நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் தனித்துவமான இடம் மற்றும் சாத்தியமான கேமிங் வசதிகள் மிகப்பெரிய பணக்காரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்ப்பதாக BNC நெட்வொர்க்கில் வாடிக்கையாளர் சேவைகளுக்கான உதவி மேலாளர் ஜோயா அக்பர் கான் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தீவில் திட்டமிடப்பட்டுள்ள தனித்துவமான பொழுதுபோக்கு வசதிகள் மற்ற முக்கிய வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel