அபுதாபி பிக் டிக்கெட்: 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் யூனியன் தின விடுமுறையின் போது நடத்தப்பட்ட அபுதாபியின் பிக் டிக்கெட் டிராவில் ஆஷிஷ் மொஹோல்கர் என்ற இந்தியர் 15 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசை வென்றுள்ளார்.
அவர் கடந்த நவம்பர் 27 அன்று 223090 என்ற டிக்கெட்டை வாங்கியதாகவும், நிகழ்ச்சியை நேரலையில் பார்க்கத் தவறிய போது நிகழ்ச்சி தொகுப்பாளர் வெற்றி குறித்து தொலைபேசி அழைப்பில் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரிச்சர்ட் உள்ளிட்ட தொகுப்பாளர்கள், அவரது வெற்றியை உறுதிசெய்த போதிலும், ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆஷிஷ், “இது உண்மையா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார். இருப்பினும், ஆஷிஷ் தான் உண்மையிலேயே கிராண்ட் பரிசு வென்றவர் என்பதை ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கணக்கு மேலாளரான ஆஷிஷ் கூறுகையில், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வந்த பின் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தனது பிக் டிக்கெட்டை வாங்கியதாகவும், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் ப்ரோமோஷன் மூலம் ஆன்லைனில் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இலவசமாகப் பெற்ற அந்த டிக்கெட் தான் அவரை அதிர்ஷ்டசாலியாக மாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த வெற்றித் தொகையை எவ்வாறு செலவிட வேண்டும் என்பது குறித்து தாய் மற்றும் மனைவியுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே லைவ் டிராவில், இந்திய, நேபாளி மற்றும் பாலஸ்தீனிய நாட்டினரின் பத்து அதிர்ஷ்ட வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் 590,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள தங்கப் பரிசுகளை தட்டிச் சென்றுள்ளனர். அத்துடன் மிலு குரியன் என்பவர் ஆன்லைனில் வாங்கிய 006898 டிக்கெட் எண் அவருக்கு புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் வேலரை பெற்றுத் தந்துள்ளது.
பிக் டிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த மாதம் முழுவதும், வரவிருக்கும் லைவ் டிராவிற்கான டிக்கெட்டுகளை வாங்கும் எவருக்கும் ஜனவரி 3 அன்று 20 மில்லியன் திர்ஹம்களுடன் வெளியேறும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், பிக் டிக்கெட் வாடிக்கையாளர்கள் வாராந்திர இ-டிராவில் தானாகவே நுழைவார்கள், அங்கு ஒரு வாடிக்கையாளர் ஒவ்வொரு வாரமும் 1 மில்லியன் திர்ஹம் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel