அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ள ஆஃபர்!! டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள் அமீரகத்தின் முக்கிய இடங்களுக்கான இலவச பாஸ்களைப் பெறலாம் என தகவல்..

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதன் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு அமீரகத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கான இலவச பாஸ்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அந்தவகையில், மார்ச் 31, 2024க்கு முன் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்கு பயணிக்கும் பயணிகள், மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் மற்றும் அட்லாண்டிஸ் அக்வாவென்ச்சருக்கு இலவச நுழைவை அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், துபாயில் எட்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தங்குமாறு எமிரேட்ஸ் விமானத்தில் முன்பதிவு செய்யும் பயணிகளும் இலவச நுழைவு டிக்கெட்டுகளை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எமிரேட்ஸ் பயணிகள் இப்போது இலவச பாஸ்கள் மூலம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும் என்பதைக் காட்சிப்படுத்தும் ஃபியூச்சரிஸ்ட் தீம் நிறைந்த அருங்காட்சியகத்தையும், உலகின் மிகப்பெரிய நீர் பூங்காவான அட்லாண்டிஸ் அக்வாவென்ச்சரில் ஸ்லைடுகளிலும் சவாரிகளிலும் நேரத்தை செலவிடலாம் என கூறப்பட்டுள்ளது.

இலவச பாஸ்களைப் பெறுவது எப்படி?

பார்வையாளர்கள் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் துபாய்க்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானங்களை முன்பதிவு செய்யும் போது அல்லது துபாயில் எட்டு மணிநேரம் வரை அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு ஸ்டாப்ஓவர் செய்வதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது இந்த சலுகையை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 31, 2024 வரை பயணம் செய்ய டிக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, இந்த சலுகையைப் பெற விரும்புபவர்கள் இரு வழி பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்றும் ஒரு வழி விமான டிக்கெட்டுகள் இந்த சலுகைக்கு தகுதி பெறாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

http://emirates.com இல் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, EKDXB24 குறியீட்டைப் பயன்படுத்தி சலுகையை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் விமான நிறுவனம் ஒவ்வொரு இடத்திற்கும் (மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர், அட்லாண்டிஸ் அக்வாவென்ச்சர்) தனிப்பட்ட குறியீடுகளை அனுப்பும். மேலும், உங்கள் விமான முன்பதிவில் உள்ள அனைவருக்கும் நேரடியாக இலவச டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஏப்ரல் 5, 2024 வரை இந்த குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் டிராவல் ஏஜென்சி, எமிரேட்ஸ் கால் சென்டர் அல்லது டிக்கெட் அலுவலகம் மூலம் முன்பதிவு செய்தால், நீங்கள் பயணம் செய்வதற்கு குறைந்தபட்சம் 96 மணிநேரத்திற்கு முன் பின்வரும் விவரங்களுடன் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. அதில்

  • பயணிகளின் பெயர்கள் (அதே முன்பதிவு குறிப்பின் கீழ் உள்ள பயணிகள் மட்டும்)
  • உங்கள் முன்பதிவு குறிப்பு
  • துபாயில் வந்த தேதி
  • உங்கள் தொடர்பு தொலைபேசி எண்
  • குறியீடுகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரி

ஆகியவற்றை உள்ளிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்பு வாங்கிய டிக்கெட்டுகளுக்கு இந்த சலுகை செல்லுபடியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!