துபாயில் அறிமுகம் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றங்களால் பயண நேரம் குறைப்பு!! RTA வெளியிட்ட தரவு….

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எமிரேட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மற்றும் பயண நேரத்தை குறைக்கவும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மேம்பாடுகள் குறித்த தரவை வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த ஆண்டு துபாய் முழுவதும் 14 பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான போக்குவரத்து மேம்பாடுகள் பயண நேரத்தை 50 சதவீதம் வரை குறைக்கவும், சாலைகளின் வாகனத் திறனை 25 சதவீதம் அதிகரிக்கவும் உதவியதாக RTA கூறியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட சாலைகள்:
அல் அசாயல் ஸ்ட்ரீட்டிலிருந்து ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் வரை அல் கைல் சாலையை நோக்கி வலதுபுறம் எக்ஸிட் பாதையை மேம்படுத்தியதுடன், அல் ஃபே ஸ்ட்ரீட்டில் ரவுண்டானாவுக்குச் செல்லும் பல பாதைகள் சேர்க்கப்பட்டது மற்றும் நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து ஓட்டத்தை அதிகரிக்கவும் இருக்கும் பாலத்தைப் பயன்படுத்தியது இதில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, துபாய் ப்ரொடக்சன் டிஸ்ட்ரிக்ட் (Dubai Production District) மற்றும் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி டிஸ்ட்ரிக்டில் நுழைவதற்கும் வெளியேறுவதற்குமான பயண நேரத்தை 50 சதவீதம் பாதியாகக் குறைத்துள்ளது என்று RTA தெரிவித்துள்ளது.
இதேபோல், அல்-சபா ஸ்ட்ரீட்டில் இருந்து துபாய் மெரினா திசையில் உள்ள கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டை நோக்கிய எக்ஸிட் பாதை அறிமுகப்படுத்தப்பட்டதால், நெரிசலை குறைத்து, பயண நேரத்தை 60 சதவீதம் வரை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூடுதலாக, அல் அசாயல் ஸ்ட்ரீட்டில் இருந்து உம் சுகீம் ஸ்ட்ரீட் வரை வலதுபுறம் வெளியேறும் பாதையை விரிவுபடுத்தி, அல் கைலில் இருந்து வரும் போக்குவரத்திற்காக உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் U-டர்ன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அல் கைல் சாலையில் அல் பர்ஷாவிலிருந்து உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் இருந்து வெளியேறுவதற்கான பயண நேரத்தை 15 நிமிடங்களிலிருந்து வெறும் ஐந்து நிமிடங்களாகக் குறைந்திருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சாலை மேம்பாடுகளில் அல் ரெபாத் ஸ்ட்ரீட்டில் இருந்து பிசினஸ் பே கிராசிங் வரை வலது புறம் எக்ஸிட் பாதையை ஒரு லேனில் இருந்து மூன்றாக விரிவுபடுத்துதல் மற்றும் திறனை அதிகரிக்கவும், அந்த திசையில் போக்குவரத்து சேவையின் அளவை மேம்படுத்தவும் போக்குவரத்து விளக்குகளுடன் பொருத்துவதும் அடங்கும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் அல் ரெபாத் ஸ்ட்ரீட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, போக்குவரத்து பாதுகாப்பு தரத்தை உயர்த்தியுள்ளது.
மேலும், எமிரேட்ஸ் சாலையில் மலிஹா ஸ்ட்ரீட் சந்திப்பை நோக்கிய எக்ஸிட் பாதை மூன்றாக விரிவுபடுத்தப்பட்டதால் வெளியேறும் திறன் ஒரு மணி நேரத்திற்கு 4,000 வாகனங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 6,000 ஆக அதிகரித்துள்ளது.
அடுத்த கட்ட சாலை மேம்பாடுகள்:
இந்த திட்டங்கள் RTA இன் விரைவு போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது எமிரேட்டின் பல்வேறு இடங்களில் 45 போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நடப்பு ஆண்டு முழுவதும் இந்த மேம்பாடுகள் தொடரும் என்று தெரிவித்த போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சியின் CEO அப்துல்லா யூசப் அல் அலி, எமிரேட்டில் உள்ள 31 தளங்களில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்களைச் செயல்படுத்துவது இந்தத் திட்டத்தில் அடங்கும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, ஷேக் முகமது பின் சையத் சாலை, அல் அவிர் தெரு, அபு பேக்கர் அல் சித்திக் தெரு, அல் ரெபாட் தெரு, அல் கைல் சாலை மற்றும் அல் மெய்டன் தெரு ஆகியவை முக்கிய பகுதிகளில் அடங்கும்.
அவரது கூற்றுப்படி, சாலைகளின் தேர்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கையானது, சாலை நெட்வொர்க் செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் பின்வரும் நான்கு முதன்மை ஆதாரங்களைப் பயன்படுத்தி நிகழ்நேர போக்குவரத்து நெரிசலைக் கண்டறிந்து ஒரு விரிவான அமைப்பின் மூலம் நடத்தப்படுகிறது: போக்குவரத்து ஆய்வுகள், போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்கள், பொது பரிந்துரைகள் மற்றும் புகார் அமைப்பு மற்றும் ஆர்டிஏவின் குழுக்களின் ஆன்-சைட் கண்காணிப்பு.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel