ADVERTISEMENT

மழையின் போது சாகசம் செய்த வாகன ஓட்டிகள்: 11 வாகனங்களை பறிமுதல் செய்த ஷார்ஜா காவல்துறை!!

Published: 16 Feb 2024, 4:12 PM |
Updated: 16 Feb 2024, 4:12 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் மழையின் போது சாலைகளில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும், ஸ்டண்ட் செய்ததற்காகவும் பிடிபட்ட ஓட்டுநர்களின் 11 வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதாக ஷார்ஜா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், சாகசம் நடந்த அதே இடத்தில் திரண்டதற்காக விதிமீறல்களுக்காக 84 வாகனங்கள் பிடிபட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. அமீரகத்தின் போக்குவரத்து சட்டத்தின் படி, மீறலில் ஈடுபட்ட  வாகனம் 60 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சாலைகளில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது குறித்து வாகன ஓட்டிகளை அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். இருப்பினும், ஓட்டுநர்கள் அவர்களின் உயிருக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாறுமாறாக சாகசம் செய்ததால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஷார்ஜா போலீஸ் ஜெனரல் கமாண்டில் உள்ள போக்குவரத்து மற்றும் ரோந்து துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்வைத் தொடர்ந்து, சட்டங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறு ஓட்டுநர்களை வலியுறுத்திய அதிகாரம், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT