அமீரக செய்திகள்

துபாயில் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் முக்கிய சாலை!! பயண நேரத்தை 33% குறைக்கும் என தகவல்….

துபாயில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றான ராஸ் அல் கோர் சாலையை (Ras Al Khor road) இரண்டு திசைகளிலும் 3 கிமீ நீளத்திற்கு மூன்று பாதைகளில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் விரிவாக்கத் திட்டம் முடிக்கப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

தற்போது, பு கத்ரா இன்டர்செக்சன் (Bu Kadra intersection) முதல் அல் கைல் சாலை இன்டர்செக்சன் (Al Khail Road intersection) வரை இரண்டு திசைகளிலும் இந்த பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஏப்ரல் தொடக்கத்தில் துபாய்-அல் அய்ன் சாலையின் திசையில் ராஸ் அல் கோர் சாலையில் உள்ள திருப்பங்களுக்கான பாதையையும் ஒன்றிலிருந்து இரண்டு வழிகளாக RTA விரிவுபடுத்த உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் துபாயின் மக்கள்தொகை அதிகமான பகுதிகளில் எமிரேட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான RTA இன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். துபாயில் ராஸ் அல் கோர் சாலை என்பது முக்கியமான சாலை ஆகும், இந்த சாலை வழியாக பல குடியிருப்பு மற்றும் தொழில்துறை மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 650,000 குடியிருப்பாளர்கள் பயணம் செய்கின்றனர்.

ஆகவே, ராஸ் அல் கோர் சாலையை ஒவ்வொரு திசையிலும் நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்துவது போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்துவதுடன் பயண நேரத்தை 33% வரை குறைக்கும் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 6,000 முதல் 8,000 வரையிலான வாகனங்களை அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், துபாய்-அல் அய்ன் சாலையை நோக்கி பைபாஸ் பாதையை மேம்படுத்துவது, ஒரு மணி நேரத்திற்கு 1,000 முதல் 2,000 வாகனங்கள் வரை அனுமதிப்பதுடன் போக்குவரத்து ஓட்டத்தை 100% அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!