அமீரக செய்திகள்

அமீரகத்தில் வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!! வானிலை மையம் அறிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் முழுவதும் ஏற்ற இறக்கமான வானிலை நிலவிய நிலையில், எதிர்வரும் வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை தேசிய வானிலை மையம் (NCM) அதன் சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, திங்கள்கிழமை (மார்ச் 4) மதியம் மேற்கு திசையில் ஏற்படும் வெப்பச்சலன மேகங்களால் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, புதன் கிழமையன்று மேகங்கள் படிப்படியாக குறையும் என்பதால், மழையின் அளவு குறையும், அதேசமயம் தெற்கில் குறைவான வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், புத்துணர்ச்சியான மற்றும் வலுவான காற்று வீசும் எனவும், தூசி மற்றும் மணலுடன் கூடிய காற்றினால் கிடைமட்ட பார்வை குறையும் எனவும் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் நிலைமைகள் மிதமான சீற்றம் முதல் கடுமையான சீற்றமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!