அமீரக செய்திகள்

துபாயில் 3 முக்கிய இடங்களில் மின்சார பேருந்து சேவையை தொடங்கும் RTA..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) டீசலில் இயங்கும் பேருந்துகளை மின்சார வாகனங்களாக மாற்றும் அதன் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், துபாயின் பூஜ்ஜிய உமிழ்வு பொது போக்குவரத்து உத்திக்கு ஏற்பவும் பிசினஸ் பே, அல் வாஸ்ல் சாலை மற்றும் துபாய் மால் ஆகிய இடங்களில் பயணிகளுக்கு சேவை செய்ய 30 மின்சார பேருந்துகளை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், மின்சார பேருந்துகளுக்கான கட்டண விபரங்களை ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இதேபோல், கடந்த 2023 ஆம் ஆண்டு லா மெர் முதல் அல் சுஃபுஹ் வரையிலான பாதையில், RTA  மின்சார பஸ் சோதனை சேவையை அறிமுகப்படுத்தியபோது பயணிகள் இலவச பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மின்சார பேருந்து சேவையானது, லா மெர் சவுத், ரஷித் பின் பகைத் மஸ்ஜித், மஜ்லிஸ் அல் கோரைஃபா, உம் சுகீம் 1, உம் சுகீம் பார்க், வைல்ட் வாதி, மெர்கடோ மால், புர்ஜ் அல் அராப், அல் சுஃபுஹ் டிராம் ஸ்டேஷன் மற்றும் துபாய் ஆஃப்ஷோர் சைலிங் கிளப் ஆகிய இடங்களை உள்ளடக்கியது. பயணிகள் இந்த மின்சாரப் பேருந்துகளில் ஏறும் போது, அவர்களின் நோல் கார்டை டேப் செய்ய வேண்டும், ஆனால் சோதனைக் காலத்தில் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

தற்பொழுது, டீசலில் இயங்கும் பேருந்துகளை படிப்படியாக மின்சார மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பேருந்துகளாக மாற்றி வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, எமிரேட்டில் மின்சாரம் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அத்துடன் ஆற்றல் திறன் கொண்ட தெரு விளக்குகள் மற்றும் வசதிகளை அதிகரிக்கவும் துபாயின் தூய்மையான ஆற்றல் மூலோபாயம் அழைப்பு விடுப்பதாகவும் RTA குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!