ஈத் விடுமுறை: துபாய் மெட்ரோ, டிராம், பேருந்து இயக்க நேரங்களில் மாற்றம் அறிவிப்பு..!!

அமீரகத்தில் ஈத் விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் நான்கு நாட்களுக்கு விடுமுறையின் போது துபாயில் வாகன ஓட்டிகளுக்கு, இலவச பார்க்கிங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துபாய் மெட்ரோ மற்றும் டிராம் இயக்க நேரம் நீட்டிக்கப்படும் என்றும் RTA அறிவித்துள்ளது.
மெட்ரோ மற்றும் டிராம் நேரங்கள்
மெட்ரோ
- ரெட் மற்றும் கிரீன் லைன் இரண்டும் ஜூன் 14, வெள்ளிக்கிழமை, ஜூன் 15 சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும்
- ஞாயிறு (ஜூன் 16) காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும்
- திங்கள் முதல் சனி வரை (ஜூன் 17 – 21) அதிகாலை 5 மணி – நள்ளிரவு 1 மணி வரை இயங்கும்
துபாய் டிராம்
சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், திங்கள் முதல் சனி (ஜூன் 17 – ஜூன் 21) வரை காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் டிராம் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது பேருந்துகள்
இதேபோல், பொது மற்றும் இன்டர்சிட்டி பேருந்துகளின் இயக்க நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும், பயணிகள் S’hail செயலியை சரிபார்க்குமாறும் RTA அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் வாட்டர் டாக்சி, துபாய் ஃபெர்ரி மற்றும் அப்ரா உள்ளிட்ட கடல் போக்குவரத்துக்கான இயக்க நேரங்களையும் RTA செயலியில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து ரூட் E100 பேருந்து ஜூன் 14 முதல் 18 வரை இயக்கப்படாது. இந்த காலகட்டத்தில் துபாயில் உள்ள இப்னு பதூதா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபிக்கு E101 பேருந்துப் பாதையில் பயணிக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல் அல் ஜாஃபிலியா பேருந்து நிலையத்திலிருந்து E102 பேருந்து வழித்தடமும் ஜூன் 14 முதல் 18 வரை இயங்காது என்றும் பயணிகள் இப்னு பதூதா பேருந்து நிலையத்திலிருந்து முஸாஃபா செல்வதற்கான பாதையைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாகன சோதனை
துபாயில் உள்ள சேவை மையங்கள் அனைத்தும் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் மூடப்படும். குறிப்பாக, உம் ரமூல், தேரா, பர்ஷா, அல் கிபாப் மற்றும் RTA தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள கியோஸ்க்கள் அல்லது ஸ்மார்ட் வாடிக்கையாளர் மையங்கள் தவிர அனைத்து வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் விடுமுறை நாட்களில் மூடப்படும் என்றும், மேற்கூறப்பட்ட மையங்கள் வழக்கம் போல் 24/7 செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel