அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

அமீரகத்தில் விசா காலம் முடிந்து ஓவர்ஸ்டேயில் தங்கியவர்கள் அபராதத்தை ஆன்லைனில் செலுத்துவது எப்படி??

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர்கள் எந்த விசாவில் இருந்தாலும் விசா காலம் முடிந்த பின்னரும் அமீரகத்தில் தொடர்ந்து தங்கினால் அவர்களுக்கு ஓவர்ஸ்டே அபராதம் விதிக்கப்படுவது பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். விசாவிற்கான சலுகைக் காலம் அகற்றப்பட்டது தெரியாமல் கூடுதல் நாட்கள் நாட்டில் தங்குவதால், விசா காலாவதியான பிறகு நாட்டில் கூடுதலாகத் தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் 50 திர்ஹம்ஸ் வீதம் அபராதம் விதிக்கப்படலாம் என்று பயண முகவர்கள் கூறியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி தங்கியிருந்தால், அனைத்துக் கட்டணங்களையும் நீக்க நீங்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். இந்த அபராதங்களை ஆன்லைன் வழியாக எளிதாக எப்படி செலுத்துவது என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்.

  • முதலில் அடையாளம், குடியுரிமை, சுங்கம் & துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் இணையதளத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில், ‘Fines and Leave Permits’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பின் தோன்றும் மற்றொரு பக்கத்தில், நீங்கள் ‘Fines – Pay Fines – Violations of Entry Permissions or Residences – Pay New Fine’ என்ற மெனுவில் ‘Start Service’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் ரெசிடென்ஸி விசாவில் தங்கியிருந்தால், அந்த பக்கத்தில் தோன்றும் காலியான இடங்களை நிரப்ப வேண்டும். இல்லையெனில், ‘citizens of certain countries’ என்பதைக் கிளிக் செய்து, காலியான இடங்களில் தேவையான தகவல்களை நிரப்பவும்.
  • அதன் பிறகு, ‘Verify Applicant’ என்பதைக் கிளிக் செய்து ‘Next’ என்பதைக் கிளிக் செய்த பிறகு, வேறொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
  • உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து, தொடர்புடைய அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்தும்படி கேட்கப்படுவீர்கள்.
  • இறுதியாக, நீங்கள் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். பணம் செலுத்தியவுடன், பரிவர்த்தனை உறுதிசெய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!