துபாய்: இதுவரை இல்லாதளவில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை.. ஒரு கிராம் தங்கம் 300 திர்ஹம்ஸை தாண்டி விற்பனை..!!
துபாய்க்கு வரும் சுற்றுலாவாசிகளும் துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் பெரிதளவில் வாங்க விரும்பும் ஒரு ஆடம்பர பொருளாக தங்கம் உள்ளது. தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் நாளுக்கு நாள் துபாயில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் துபாயில் தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாதளவில் உச்சத்தை தொட்டுள்ளது.
இதன்படி துபாயில் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஒரு கிராமுக்கு 305 திர்ஹம்களைத் தாண்டி புதிய சாதனையை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. துபாய் ஜூவல்லரி குழுமத்தின் தரவுகளின்படி, இன்று மதியம் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 305.75 திர்ஹம்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 22K, 21K மற்றும் 18K ஆகியவையும் ஒரு கிராமுக்கு முறையே 283.25 திர்ஹம்ஸ், 274.0 திர்ஹம்ஸ் மற்றும் 235.0 திர்ஹம்ஸ் என விற்பனையாகி, இதுவரை இல்லாத விலையாக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலகளவில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகளால், மாலை 4.10 மணியளவில், ஸ்பாட் தங்கம் (spot gold) அவுன்ஸ் ஒன்றுக்கு 0.86 சதவீதம் அதிகரித்து, 2,525.01 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விலை உயர்வு குறித்து நூர் கேபிட்டலின் தலைமை சந்தை மூலோபாய நிபுணர் முகம்மது ஹஷாத் கூறுகையில், “கடந்த வாரம் பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க மீள் எழுச்சியை கண்டுள்ளது, S&P 500 மற்றும் கனடியன் TSX ஆகியவை ஆகஸ்ட் 5ல் இருந்த குறைந்த அளவிலிருந்து முறையே 6.5 சதவீதம் மற்றும் 5 சதவீதம் உயர்ந்துள்ளன. இது முதன்மையாக இரண்டு முக்கிய காரணிகளால் உந்தப்பட்டதாகத் தோன்றுகிறது. அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் பணவீக்கத்தில் தொடர்ச்சியான மிதமான நிலை மற்றும் மீள்திறன்மிக்க பொருளாதார செயல்திறன்” என்று தெரிவித்துள்ளார்.
வணிகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கத்தின் எழுச்சிக்கு முக்கிய பங்களிப்பாளர்களாக இந்த இரண்டு காரணிகளை முன்னிலைப்படுத்தியுள்ளனர். தங்கத்தின் பொருளாதார செயல்திறன், பணவீக்கத்தில் ஒரு சாத்தியமான மந்தநிலையை பரிந்துரைக்கும் இந்த சமீபத்திய தரவுகளால் தங்கத்தின் விலை தற்பொழுது உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel