அமீரக செய்திகள்

துபாய்: ஜபீல் ஸ்ட்ரீட்டை அல் கைல் சாலையுடன் இணைக்கும் மூன்று வழி பாலம்.. பணிகள் முடிவடைந்ததாக RTA அறிவிப்பு..!!

துபாயில் பயணிகளின் போக்குவரத்திற்காக பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்கள் சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக மேற்கொள்ளப்பட்ட ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட்டை ஒரு பெரிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் புதிய பாலம் இப்போது நிறைவடைந்துள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

700 மீட்டர் நீளமுள்ள இந்த புதிய மூன்று வழி ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட் பிரிட்ஜ், இப்போது ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட் மற்றும் ஓது மேத்தா சாலையை அபுதாபியின் திசையில் அல் கைல் சாலையுடன் இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பாலம் ஒரு மணி நேரத்திற்கு 4,800 வாகனங்களைக் கையாளக்கூடியதாக இருக்கும் என்றும், மேலும் பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் என்றும் RTA தெரிவித்துள்ளது.

துபாயில் 700 மில்லியன் திர்ஹம் செலவில் ஐந்து புதிய பாலங்களை உள்ளடக்கிய இந்த திட்டம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை நீக்கி பயண நேரத்தை 30 சதவீதம் வரை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் Zabeel, Meydan, Al Quoz 1, Ghadeer Al Tair மற்றும் Jumeirah Village Circle உள்ளிட்ட பல இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் RTA கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!