அமீரக செய்திகள்

துபாய்: நாளை முதல் புதிதாக இயக்கப்படும் 4 மெட்ரோ இணைப்பு பேருந்து சேவைகள்.. தற்போதைய சேவைகளிலும் மாற்றம் அறிவிப்பு..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA புதிதாக நான்கு மெட்ரோ இணைப்பு பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த நான்கு புதிய வழித்தடங்கள் நாளை (ஆகஸ்ட் 30) முதல் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு வழித்தடங்களானது 31 ஐ இரண்டு புதிய பாதைகளாக (F39 மற்றும் F40) மாற்றும் என்றும் மற்ற இரண்டு வழிகளும் ரூட் F56 ஐ F58 மற்றும் F59 ஆக மாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் இவை அனைத்தும் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு இன்டர்சிட்டி வழித்தடம் உட்பட பல வழித்தடங்களின் சேவைகளை ஆணையம் மேம்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த மாற்றங்களை பயணிகள் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப பயணங்களை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய வழிகள் எவ்வாறு செயல்படும்?

  • புதிய பாதையான, ரூட் F39, எடிசலாட் பேருந்து நிலையத்தில் இருந்து Oud Al Muteena ரவுண்டானா பேருந்து நிறுத்தம் 1 இடையே இயக்கப்படும்.
  • இரண்டாவது புதிய வழித்தடமான ரூட் F40, எடிசலாட் பேருந்து நிலையத்திலிருந்து மிர்திஃப், ஸ்ட்ரீட் 78 இடையே இயக்கப்படும்.
  • ரூட் F58 அல் கைல் மெட்ரோ நிலையம் மற்றும் துபாய் இன்டர்நெட் சிட்டி இடையே இயக்கப்படும்.
  • ரூட் F59 துபாய் இன்டர்நெட் சிட்டி மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் Dubai knowledge village இடையே இயக்கப்படும்

இதர மாற்றங்கள்

பயணிகளுக்கான பாதை அடையாளத்தை எளிமையாக்குதல், சேவை நெட்வொர்க்கை விரிவுபடுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, தற்போதுள்ள வழித்தடங்களில் மற்ற மாற்றங்களையும் RTA அறிவித்தது.

மாற்றங்கள் பின்வருமாறு:

1. ரூட் 21 மறுபெயரிடப்பட்டு இரண்டு வழிகளாகப் பிரிக்கப்படும் – 21A மற்றும் 21B. ரூட் 21A அல் கூஸ் மருத்துவ நோயியல் சேவைகள் பேருந்து நிறுத்தம் 1 இல் (Al Quoz Clinical Pathology Services Bus Stop 1) இருந்து அல் குபைபா பேருந்து நிலையம் வரை தொடங்கும்.

அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அல் கூஸ் மருத்துவ நோயியல் சேவைகள் பேருந்து நிறுத்தம் 1 வரை ரூட் 21B எதிர் திசையில் இயங்கும்.

2. ரூட் 61 D, ரூட் 66 உடன் இணைக்கப்படும்.
3. ரூட் 95 பேருந்து சேவையானது ரூட் 95A உடன் இணைக்கப்படும். இது ரூட் 95 இன் பயனர்கள் ரூட் X92 உடன் இணைக்க உதவும். கூடுதலாக, ரூட் 95A இன் பாதையானது வெனெட்டோ, ஜெபல் அலி வாட்டர்ஃபிரண்ட், பார்கோ ஹைப்பர்மார்க்கெட் வரை ஜெபல் அலி தொழில்துறை பகுதியை உள்ளடக்கும் வகையில் சரிசெய்யப்படும்.

4. அல் குபைபா நிலையத்திலிருந்து ஓட் மேத்தா வரையிலான செக்டார் ரத்து செய்யப்பட்டதால், ரூட் 6க்கான பாதை, ஓட் மெத்தா மெட்ரோ நிலையத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து துபாய் ஹெல்த்கேர் சிட்டி வரை இயக்குவதற்காகச் சுருக்கப்படும்.

5. ரூட் 99 JAFZA One ஐ உள்ளடக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்.

6. The Greens இல் புதிய நிறுத்தங்களைச் சேர்க்க ரூட் F31 சரிசெய்யப்படும்.

7. அல் ஃபர்ஜானில் ரூட் F45க்கு புதிய நிறுத்தங்களும் சேர்க்கப்படும்.

8. JAFZA One நிறுத்தம் ரூட் F54 இலிருந்து அகற்றப்படும்.

9. யூனியன் பேருந்து நிலையத்திற்குப் பதிலாக எடிசலாட் பேருந்து நிலையத்திலிருந்து ஃபுஜைராவிற்கு செல்லும் வகையில் E700 இன்டர்சிட்டி வழி சரிசெய்யப்படும்.

10. RTA இன் பொதுப் போக்குவரத்து நிறுவனம், 6, 20B, 26, 36A, 36B, 50, 66, 83, 88, 95A, 96, 99, 320, C01, C003, C10, F05, F07, F10, F18, F23, F23A, F24, F31, F45, F46, F47, F49, F53, F54, SM1, X02, X25, மற்றும் X92 உள்ளிட்ட 35 பேருந்து வழித்தடங்களை சரியான நேரத்தில் வருவதை உறுதிசெய்யும்.

இந்தச் மேம்பாடுகளானது பயணிகளின் தினசரி பயண அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் அவர்கள் நகரம் முழுவதும் உள்ள இடங்களைச் சுமுகமாக அடைய அனுமதிக்கிறது என RTA தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!