துபாய்: நோல் கார்டில் பேலன்ஸ் இல்லையா..?? வெறும் சில நொடிகளில் பஸ் ஸ்டாப்பிலேயே டாப்-அப் செய்வது எப்படி..??
துபாயில் ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். துபாயை பொறுத்தவரை பஸ், மெட்ரோ, டிராம் என பல்வேறு விதமான பொது போக்குவரத்து வசதிகள் இருக்கின்றது. இதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்து பயணம் செய்ய நினைத்தாலும், உங்களிடம் எப்போதும் நோல் கார்டு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு வழக்கமான பயனராக இருந்தால், உங்கள் கார்டில் மாதாந்திர அல்லது வருடாந்திர பாஸ் செயல்படுத்தப்பட்டிருக்கலாம், இது உங்களை மிகவும் எளிதாக பயணிக்க அனுமதிக்கிறது, ஆனால் நீங்கள் ஒரு பயணத்திற்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும் என்றால், உங்கள் கார்டில் போதுமான பணம் இருப்பது அவசியம்.
துபாயில் இருக்கும் பல பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் உள்ள டாப்-அப் மெஷின்களில் உங்கள் நோல் கார்டை டாப் அப் செய்வதற்கான ஒரு எளிய வழி உள்ளது. உங்கள் பேருந்து நிலையத்திற்கு அருகில் நீங்கள் இதுவரை பெரிதாக கவனிக்காத இந்த மெஷின் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் உங்களிடம் ஒரு 5 திர்ஹம்ஸ் அல்லது 10 திர்ஹம்ஸ் நோட்டு இருந்தால் கூட, அவை உங்கள் கார்டை விரைவாக டாப் அப் செய்ய அனுமதிக்கின்றன. இந்த டாப் அப் இயந்திரங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன. அதனைப் பற்றி கீழே காணலாம்.
1. டாப் அப் மெஷின்கள் எங்கே அமைந்துள்ளன?
நீங்கள் பேருந்து நிலையத்தில் இருந்தும், அதனை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், ஸ்டேஷனில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். இது ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட கம்பார்ட்மெண்ட் அல்லது பேருந்து நிறுத்த அடையாளம் இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம். இது உங்களுக்கு அருகிலுள்ள நோல் டாப்-அப் இயந்திரத்திற்கான இருப்பிடத்தை தெரியப்படுத்தும்.
அது மட்டுமின்றி இந்த இணையப் பக்கத்தை நேரடியாகப் பார்வையிடுவதன் மூலமும் நீங்கள் டாப் அப் செய்யும் மெஷின் இருப்பிடத்தை காணலாம்: https://www.rta.ae/eservices/rtagismapcsc/RTA_Map.html?lang=en இதில் உங்கள் தற்போதைய இருப்பிடத்தை அணுக அனுமதித்து, வழங்கப்பட்ட விருப்பங்களிலிருந்து ‘Salik மற்றும் nol kiosks’ அல்லது ‘nol top-up mahcines’ என்பதைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் மெஷின்கள் அமைக்கப்பட்டிருக்கும் இருப்பிடம் மற்றும் அங்கு செல்வதற்கான பாதை வரைபடத்தையும் பெறலாம்.
2. இது பணத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது
RTA வழங்கும் ஸ்மார்ட் கியோஸ்க்குகள், ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் அமைக்கப்பட்டிருக்கும். இது பல கட்டண விருப்பங்களை ஏற்கும் பட்சத்தில், பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரங்கள் பணத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன. எனவே, இதனை பயன்படுத்த விரும்பினால் உங்களுடன் சில வங்கி நோட்டுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
3. தேவையான பணத்தை வைத்திருக்கவும்
இந்த மெஷின் பேலன்ஸ் தொகையை வழங்காததால், பெரிய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவது நல்லதல்ல. உங்கள் கார்டுக்கு 100 அல்லது 200 திர்ஹம்ஸிற்கு டாப்-அப் செய்யத் திட்டமிட்டால் தவிர, மற்ற நேரங்களில் பெரிய தொகையுள்ள நோட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இந்த இயந்திரத்தில் டெபாசிட் செய்தவுடன், உங்களுக்கு இருக்கும் ஒரே வழி, பணத்தை டாப் அப் செய்வது அல்லது அதை ரத்து செய்வதாகும். ரத்து செய்யும் பட்சத்தில் நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
இந்த டாப் அப் இயந்திரத்தின் மூலம் சில நொடிகளில் உங்கள் கார்டை டாப்-அப் செய்ய முடியும். இயந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘1’ என்று பெயரிடப்பட்ட ஸ்லாட்டில் உங்கள் நோல் கார்டைச் செருகவும், ‘Reading card – please wait’ என்ற செய்தியுடன் திரை ஒளிரும். பின் கார்டில் உள்ள தற்போதைய இருப்பு காண்பிக்கப்பட்டு பணத்தை இயந்திரத்திற்குள் செலுத்துவதற்கான செய்தியை காண்பிக்கும். பேங்க் நோட்டின் ஸ்லாட் திரைக்கு கீழே உள்ளது, நீங்கள் பணத்தை உள்ளிட்டதும், திரையில் தொகை பிரதிபலிக்கும்.
அதன் பின் கார்டில் தொகையைச் சேர்க்க விரும்பினால் ’confirm’ என்பதை அழுத்தவும். அதே நேரத்தில் பணத்தை செலுத்துவதில் நீங்கள் தவறு செய்தால், பரிவர்த்தனையை ரத்து செய்ய திரையின் மேல் உள்ள ‘push’ என்பதை அழுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel