UAE: பொது மன்னிப்பில் இந்தியர்கள் நாடு திரும்ப துணைத் தூதரகம் சிறப்பு ஏற்பாடு.. ஹெல்ப்லைன் எண்களும் வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் தனது இரண்டு மாத பொது மன்னிப்பு திட்டத்தை இன்று செப்டம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ள நிலையில், விசா காலாவதியாகி நாடு திரும்ப முடியாமல் அமீரகத்தில் தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகளுக்கு உதவுவதற்காக துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் சிறப்பு நடவடிக்கைகளையும், ஹெல்ப்லைன் எண்களையும் அறிவத்துள்ளது.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் நபர்களுக்கு துணைத் தூதரகம் அவசரகாலச் சான்றிதழ்களை (ECs) இலவசமாக வழங்குகிறது, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும், அவிர் குடிவரவு மையத்திலும் இதற்கான கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கவுன்டர்கள் நாளை செப்டம்பர் 2, 2024 முதல் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மறுநாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை துணைத் தூதரகத்திலிருந்து தங்கள் ஆவனத்தை சேகரிக்கலாம்.
அதேபோன்று துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள BLS மையங்கள் மூலம் அதிக காலம் தங்கியிருப்பவர்கள் தங்களுடைய ரெசிடன்சி நிலையை முறைப்படுத்தலாம் எனவும், நாடு திரும்புபவர்களுக்கு குறுகிய கால செல்லுபடியாகும் பாஸ்போர்ட் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅத்துடன் இந்த மையங்கள் முன் அனுமதி தேவையில்லாமல் வாக்-இன் முறையில் நேரடியாக விண்ணப்பதாரர்களை ஏற்றுக்கொள்ளும் என்பதுடன், விண்ணப்பதாரர்களின் வசதிக்காக பொது மன்னிப்பு காலம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் BLS மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்றும் இந்திய துணைத் தூதரகம் கூறியுள்ளது.
இது தவிர இந்தியப் பிரஜைகளுக்குத் தேவையான தகவல் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் 050-9433111 என்ற பிரத்யேக ஹெல்ப்லைன் எண்ணையும், மேலும் விசாரணைகளுக்கு 24/7 உதவி கிடைக்கும் வகையில் 800-46342 என்ற பிபிஎஸ்கே ஹெல்ப்லைன் எண்ணையும் இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel