UAE: வேலையை மாற்றும்போது ஊழியர்கள் ‘விசா ஹோல்ட்’ செய்ய முடியுமா??
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தற்போதைய வேலையிலிருந்து விலகி புதிய வேலையில் சேருவதற்காக ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொரு எமிரேட்டுக்கு மாறும்போது அவர்களின் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் தங்கியிருக்கும் குடும்பத்தின் விசா நிலையை உடனடியாக மாற்ற வேண்டுமா? அல்லது அவர்கள் ‘விசா ஹோல்ட்’ விருப்பத்தை தேர்வு செய்யலாமா?
இதுபோன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கலாம். பொதுவாக, அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொரு எமிரேட்டுக்கு மாறும்போது செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
உதாரணமாக, ஒரு ஊழியர் துபாயில் இருந்து அபுதாபிக்கு மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் முதலாளியால் வேலை நிறுத்தம் அல்லது வேலையிலிருந்து ராஜினாமா செய்கிறார். அவர் பணி அனுமதி ரத்து ஆவணத்தில் கையெழுத்திட்ட பிறகு, முதலாளி ஊழியரின் பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இது 2022 அமைச்சரவை தீர்மானம் எண் 7 (3) இன் பிரிவு (1) மற்றும் 2021 இன் கூட்டாட்சி ஆணை-சட்டம் எண். (33) ஆகியவற்றுக்கு இணங்க உள்ளது.
இது வேலைவாய்ப்பு உறவுகளின் ஒழுங்குமுறை குறித்து பின்வருமாறு கூறுகிறது:
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeபணி அனுமதிகளை ரத்து செய்வதற்கான நடைமுறைகள்
- அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்ட சேனல்கள் வழியாக பணி அனுமதியை ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
- தேவையான தகவல்கள் மற்றும் இணைப்புகளை பூர்த்தி செய்தல்.
- பணி அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது புதுப்பிக்காமல் இருந்தாலோ அபராதம் செலுத்துதல்.
- ஊழியர் தனது உரிமைகளைப் பெற்றுள்ளார் என்ற நிறுவனத்தின் அறிவிப்பு.
- அமைச்சர் அல்லது அவரது பிரதிநிதியின் முடிவால் குறிப்பிடப்பட்ட வேறு ஏதேனும் நிபந்தனைகள்.
அதன் பிறகு, முதலாளி அமீரகத்தில் ஊழியரின் ரெசிடென்சி விசாவை ரத்து செய்ய வேண்டும். ஊழியர் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரெசிடென்சி விசாக்களின் ஸ்பான்சராக இருக்கும் பட்சத்தில், ஒரு புதிய வேலைவாய்ப்பு விசாவுக்கு மாறும்போது குடும்ப உறுப்பினர்களின் விசாக்களை ஹோல்டில் வைக்க ஊழியருக்கு விருப்பம் உள்ளது.
இந்த விசா ஹோல்ட் சேவை ஊழியரின் குடும்ப உறுப்பினர்களின் விசாக்களை 60 நாட்கள் வரை செயலில் வைத்திருக்க அனுமதிக்கிறது. மேலும், நீங்கள் விசாக்களை ரத்து செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் ஒரு புதிய வேலைவாய்ப்பு விசாவைப் பெறும் வரை அந்த விசாக்களை ஹோல்டில் வைத்திருக்கும் உங்கள் விருப்பத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கலாம். ஒரு அமர் மையத்திற்குச் சென்று, மேற்கூறிய செயல்முறையை ஊழியர்கள் தொடங்கலாம்.
ஊழியரின் தற்போதைய விசா துபாயிலிருந்து வழங்கப்பட்டு, புதிய விசா அபுதாபியிலிருந்து வழங்கப்பட்டால், அவர் ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டவர்கள் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம்-துபாய் (GDRFA) அல்லது அடையாளம், குடியுரிமை, சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையத்தையும் (ICP) அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel