துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் 2024: இலவச மற்றும் கட்டண நிகழ்வுகளின் முழு பட்டியல் இதோ!!
துபாய் குடியிருப்பாலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்சின் (DFC) எட்டாவது பதிப்பு அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்க உள்ளதாக துபாய் ஃபெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (DFRE) அறிவித்துள்ளது.
துபாயில் 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த மாபெரும் ஃபிட்னஸ் நிகழ்வு, 30 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் வீதம் உடற்பயிற்சி செய்ய அனைத்து குடியிருப்பாளர்களையும் ஊக்குவிக்கும். இதில் எமிரேட் முழுவதும் பயணிக்கும் மொபைல் ஜிம்பாக்ஸ் முதல் நீருக்கடியில் நடவடிக்கைகள் வரை, உடற்பயிற்சி ஆர்வலர்கள் ஈடுபடுவதற்கு ஏராளமான போட்டிகள் உள்ளன.
இது குறித்து DFREயின் CEO அஹ்மத் அல் காஜா கூறுகையில், “துபாயில் பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய சாதனை எண்களை இந்தாண்டு மிகைப்படுத்தி முறியடிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசிய போது, இந்த ஆண்டு, பல சர்வதேச போட்டிகள் நகரத்திற்கு வரவுள்ளதாகவும், இது மிகப்பெரிய துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்சாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeகடந்த ஆண்டு 35,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்றதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு துபாய் ரைடு பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வுக்கான பதிவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.
எனவே, சைக்கிள் ஓட்டுபவர்கள் வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி, ஷேக் சையத் சாலையில் தொடங்கப்படும் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்கலாம். இதில் டவுன்டவுன் துபாயைச் சுற்றி 12 கிமீ பாதை மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற 4 கிமீ பாதை என இரண்டு விருப்பங்கள் உள்ளன.
ஃபிட்னஸ் வில்லேஜ் மற்றும் நிகழ்வுகள்
இந்த ஆண்டு, நகரம் முழுவதும் மூன்று ஃபிட்னஸ் வில்லேஜ்கள் மற்றும் 23 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி மையங்கள் இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முதலாவதாக, நகரின் சின்னமான கைட் பீச் ஃபிட்னஸ் வில்லேஜ் அனைத்து வயதினருக்கும் ஏற்ற பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது, துபாய் முனிசிபாலிட்டி ஃபிட்னஸ் வில்லேஜ் ஜபீல் பூங்காவிற்குள் அமையும். இது புதிய கிரிக்கெட் மண்டலம், ரன்னிங் கிளப், ஸ்பின்னிங் மண்டலம் மற்றும் கிட்ஸ் ஃபிட்னஸ் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி மண்டலங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், துபாய் ரன் மற்றும் துபாய் ரைடுக்கான அதிகாரப்பூர்வ பிப் விநியோக மையமாகவும் இந்த வில்லேஜ் செயல்படும்.
மூன்றாவது, RTA அல் வர்கா பார்க் ஃபிட்னஸ் வில்லேஜ். இது சைக்கிள் ஓட்டுதல் முதல் பல விளையாட்டு மண்டலங்கள் வரை பல்வேறு செயல்பாடுகளை வழங்கும். கூடுதலாக, 75 பைக்குகள் மற்றும் மெக்கானிக்குகள் உள்ள சைக்ளிங் ஹப், ஒரு புதிய ரன்னிங் கிளப் மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் கால்பந்து ஆர்வலர்களுக்காக நியமிக்கப்பட்ட பகுதிகள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களில் அடங்கும்.
30 நாட்கள் முழுவதும் ஃபிட்னஸ் நிகழ்வுகள் நிறைந்த ஒரு காலெண்டர் அனைத்து வயதினருக்கும் உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு உதவும் என்பதால், என்னென்ன நிகழ்வுகள் எந்தெந்த தேதி மற்றும் இடங்களில் நடைபெறுகிறது என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
அக்டோபர் 27 அன்று, பிளஸ்500 சிட்டி அரை மாரத்தான் துபாய் இண்டர்நேஷனல் ஃபினான்சியல் சென்டரில் (DIFC) உள்ள கேட் கட்டிடத்தில் தொடங்கும்.
நவம்பர் 2 அன்று, துபாய் ஸ்டாண்ட் அப் பேடில் நிகழ்வு நடைபெறும். குடியிருப்பாளர்கள் ஹத்தா அணைக்கு திரும்பும் போது அமைதியான நீர் மற்றும் அழகிய மலைகளை அனுபவிக்க முடியும். அனைத்து அனுபவ நிலைகளிலும் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்ட சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதன்முறையாக, நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் ஹத்தா அணையில் இலவச கயாக்கிங் அமர்வுகளையும் அனுபவிக்க முடியும். இது நாள் முழுவதும் கிடைக்கும் என்றாலும், இந்த ஸ்லாட்டுகள் கிடைக்கும் தன்மை மற்றும் தளத்தில் முன்பதிவு செய்வதற்கு ஏற்ப கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
முதல் முறையாக, பிரீமியர் பேடல் பி1 போட்டி நவம்பர் 3ஆம் தேதி துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சில சிறந்த வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 8 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகைக்கு போட்டியிடுவார்கள்.
குடியிருப்பாளர்கள் மத்தியில் சூப்பர் பிரபலமான துபாய் ரன்னுடன் ஃபிட்னஸ் சேலஞ்ச் முடிவடைகிறது. இது நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் ஷேக் சயீத் சாலையில் 5 கிமீ முதல் 10 கிமீ வரையிலான வழித்தடங்களைத் தேர்ந்தெடுத்து துபாயின் சின்னமான அடையாளங்களைக் கடந்து செல்வார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel