ADVERTISEMENT

UAE: மூன்று எமிரேட்களில் இன்று வெளுத்து வாங்கிய மழை..!! அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று NCM அறிக்கை…!!

Published: 7 Oct 2024, 8:46 PM |
Updated: 7 Oct 2024, 8:46 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, இன்றைய தினம் (திங்கள்கிழமை) ஷார்ஜா, ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய எமிரேட்களில் பல்வேறு தீவிரமான மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய வானிலை நிலவரங்களின் படி, ஷார்ஜாவின் அல் தைத் பகுதி மற்றும் மடம் சாலை மற்றும் ராஸ் அல் கைமாவின் சுஹைலா, ஜபல் அல் ரஹாபா, ஜெபல் ஜெய்ஸ் மற்றும் கலிலா உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில்  பலத்த மழை பெய்து வரும் காட்சிகளை புயல் மையம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. குறிப்பாக, ராஸ் அல் கைமாவில் கனமழை காரணமாக மலைகள் வழியாக ஒரு நீர்வீழ்ச்சி பாய்வதை வீடியோவில் காணலாம். நாட்டின் கிழக்குப் பகுதிகளிலும் இன்று மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

இப்பகுதிகளில் நிலவிய அபாயகரமான வானிலை காரணமாக, நாட்டின் வடக்குப் பகுதிகளில் NCM ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது, மேலும் வெளிப்புற நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மழையுடன் தொடர்புடைய வெப்பச்சலன மேகங்கள் உருவாவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை MET வெளியிட்டுள்ளது, இன்று இரவு 9 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. NCM வெளியிட்ட முன்னறிவிப்பில், சில கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இந்த காற்று சில உள் பகுதிகளில் பரவக்கூடும் என்றும் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, அபுதாபியின் பல பகுதிகளில் திங்கட்கிழமை முதல் அக்டோபர் 9 புதன்கிழமை வரை பல்வேறு தீவிரத்துடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை துறை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மேற்பரப்பு குறைந்த காற்றழுத்தத்தை அனுபவிப்பதால், அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று NCM முன்னரே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel