அமீரக செய்திகள்

அமீரகத்தில் எந்தெந்த போக்குவரத்து மீறல்களுக்கு எவ்வளவு ப்ளாக் பாயிண்ட்ஸ் மற்றும் அபராதம் விதிக்கப்படும்??

ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்த 2017 ஆம் ஆண்டிற்கான அமைச்சர் தீர்மானம் எண் (178) இன் படி, ஓட்டுநர்கள் ப்ளாக் பாயின்ட்களைப் பெறக்கூடிய அனைத்து போக்குவரத்து மீறல்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

கீழே பட்டியலிடப்பட்டுள்ள மீறல்கள் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும், கனரக வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களுக்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வாகனத்தைப் பயன்படுத்தினால், 24 ப்ளாக் பாயின்ட்களுடன் 3,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் வாகனம் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
  • அனுமதியின்றி எரியக்கூடிய அல்லது அபாயகரமான பொருட்களை வாகனத்தில் எடுத்துச் சென்றால், 24 ப்ளாக் பாயின்ட்களுடன் 3,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • கடுமையான விபத்து அல்லது காயங்களை ஏற்படுத்துபவர்களுக்கு 23 ப்ளாக் பாய்ண்ட்களுடன் வாகனம் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும். மேலும், நீதிமன்றத்தால் அபராதம் முடிவு செய்யப்படும்.
  • நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 23 ப்ளாக் பாய்ண்ட்களுடன் 3,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 90 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 80 கி.மீக்கு மேல் தாண்டினால் 23 ப்ளாக் பாய்ண்ட்களுடன் 3,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • ஓட்டுநர் அல்லது மற்றவர்களின் உயிருக்கு அல்லது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டினால் 23 ப்ளாக் பாய்ண்ட்களுடன் 2,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • பொது மற்றும் தனியார் வசதிகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டினால் 23 ப்ளாக் பாயின்ட்களுடன் 2,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 23 ப்ளாக் பாயின்ட்களுடன் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட அபராதம் மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்
  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 60 கி.மீ.க்கு மேல் தாண்டினால் 12 ப்ளாக் பாயின்ட்களுடன் 2,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • சிவப்பு விளக்கை தாண்டிச் செல்லும் இலகுரக வாகனங்களுக்கு 12 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • அனுமதியின்றி வாகனத்தின் எஞ்சின் அல்லது சேஸை மாற்றுதல்- 12 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • மோட்டார் சைக்கிள்களுக்கான சிவப்பு விளக்குகளை தாண்டிச் சென்றால் 12 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • போக்குவரத்து காவலரிடம் இருந்து தப்பிச் சென்றால் 12 ப்ளாக் பாயின்ட்களுடன் 800 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் வாகனம் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
  • அதிக சத்தத்துடன் வாகனத்தை ஓட்டினால் 12 ப்ளாக் பாயின்ட்களுடன் 2,000 திர்ஹம் அபராதம்
  • மற்றொரு வாகன வகைக்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டினால்  12 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம்
  • தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வாகனத்தை நுழைத்தால், 8 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ்  அபராதமும் மற்றும் 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • சிறு விபத்துகளில் மோதி விட்டு தப்பிச் சென்றால்,  8 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம் மற்றும் வாகனம் ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 60 கிமீக்கு மிகாமல் மீறுபவர்களுக்கு 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 15 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • மாசு ஏற்படுத்தும் வாகனத்தை ஓட்டினால்  6 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000  திர்ஹம்ஸ் அபராதம்
  • வாகனத்திலிருந்து கழிவுகளை சாலையில் வீசிச் சென்றால் 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம்
  • ஆபத்தான வழியில் சாலையில் நுழைந்தால் 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 600 திர்ஹம் அபராதம்
  • சாலையில் மற்ற வாகனங்களை தவறாக முந்திச் செல்வது 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 600 திர்ஹம் அபராதம்
  • சாலை ஓரத்திலிருந்து முந்திச் செல்பவர்களுக்கு 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம்
  • தீ ஹைட்ரண்ட்களுக்கு முன்னால் பார்க்கிங் செய்தால் 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம்
  • சிறப்புத் தேவையுடையவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் பார்க்கிங் செய்பவர்களுக்கு 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • நியாயமான காரணமின்றி நடுரோட்டில் காரை நிறுத்தினால் 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம்
  • அவசரகால வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், போலீஸ் கார்கள் அல்லது உத்தியோகபூர்வ கான்வாய்களுக்கு வழி அல்லது முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால்,  6 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம்
  • பாதசாரிகள் கடக்கும் பாதைகளில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றால் 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • வாகனத்தின் விளக்குகள் வேலை செய்யவில்லை என்றால் 6 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம்
  • வாகனத்தின் திடீர் விலகலுக்கு 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம்
  • நியமிக்கப்படாத வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 1,000 திர்ஹம்ஸ் அபராதம்
  • வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால், 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 800 திர்ஹம் அபராதம்
  • கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டினால், 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 800 திர்ஹம் அபராதம்
  • அனுமதியின்றி அல்லது அங்கீகரிக்கப்படாத சூழ்நிலைகளில் வாகனங்களை அணிவகுப்புகளில் பயன்படுத்துதல் 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்  மற்றும் வாகனம் 15 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
  • போக்குவரத்து திசைக்கு எதிராக வாகனத்தை ஓட்டினால் 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 600 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஏழு நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • காலாவதியான டயர்களுடன் வாகனம் ஓட்டினால், 4 ப்ளாக் பாயின்ட்களுடன்  500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் வாகனம் ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
  • காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டினால், 4  ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும்  வாகனம் ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
  • காலாவதியான பதிவுடன் வாகனத்தை ஓட்டினால் 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் பதிவு மூன்று மாதங்களுக்கு முன்பு காலாவதியானால் ஏழு நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்
  • காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் வாகனம் ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
  • போக்குவரத்து துறையின் உரிமம் இல்லாத வாகனத்தை ஓட்டினால், 4 ப்ளாக் பாயின்ட்களுடன்  500 திர்ஹம் அபராதம் வழங்கப்படும் மற்றும்  வாகனம் ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
  • ஆபத்தான முறையில் வாகனத்தை பின்னே எடுத்தால் 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மெட் அணியத் தவறிய ஓட்டுநருக்கு 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • குறிப்பிடப்படாத பகுதிகளிலிருந்து யு-டர்ன் எடுப்பது 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதத்திற்கு வழிவகுக்கும்.
  • காரை தவறாக திருப்பினால், 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • விளக்கு இல்லாமல் இரவில் வாகனம் ஓட்டினால் 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • விளக்குகள் இல்லாமல் பனிமூட்டமான வானிலையில் வாகனம் ஓட்டினால், 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • சம்பந்தப்பட்ட அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி பனிமூட்டமான காலநிலையில் வாகனம் ஓட்டுதல் 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இலகுரக வாகனத்தை ஏற்றுவது 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • சாலைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இலகுரக வாகனத்தை ஏற்றுவது 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • பாதுகாப்பற்ற பொருட்களை இலகுரக வாகனத்தில் ஏற்றுவது 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 500 திர்ஹம் அபராதம்
  • ஹார்ன் அல்லது கார் ரேடியோவை தொந்தரவு செய்யும் வகையில் பயன்படுத்தினால், 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம்
  • குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது கல்வி நிறுவனங்கள் அல்லது மருத்துவமனைகளைச் சுற்றியோ மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டினால், 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம்
  • சீட் பெல்ட் அணியத் தவறிய டிரைவருக்கு 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம்
  • பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கத் தவறினால் 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம்
  • போக்குவரத்து காவலரின் அறிவுரைகளை பின்பற்றத் தவறினால், 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம்
  • பாதை தெளிவாக இருப்பதை உறுதி செய்யாமல் சாலையில் நுழைவது 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம்
  • வாகனங்களை அவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அல்லாமல் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் 4 ப்ளாக் பாயின்ட்களுடன் 300 திர்ஹம் அபராதம்
  • வாகனத்தின் இண்டிகேட்டர் வேலை செய்யவில்லை என்றால் 2 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம்
  • பிரேக் விளக்குகள் வேலை செய்யவில்லை என்றால் 2 ப்ளாக் பாயின்ட்களுடன் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!