அமீரக செய்திகள்

அபுதாபி: நெடுஞ்சாலையில் திடீரென காரை நிறுத்தியதால் லாரி மோதி விபத்து!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

அபுதாபி காவல்துறையானது அவ்வப்போது வாகன ஓட்டிகளின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் ஏற்படும் சாலை விபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தனது சமூக வலைதளத்தில் விபத்து குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் அபுதாபியில் உள்ள நெடுஞ்சாலையில் இரண்டு ஓட்டுநர்கள் திடீரென வாகனத்தை நிறுத்தியதால், கடுமையான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

ஒரு காட்சியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற பிக்அப் டிரக்கிலிருந்து மெத்தை பறப்பதைப் பார்த்ததும் ஒரு வாகன ஓட்டி சாலையின் நடுவே திடீரென நிறுத்துவதையும், மற்றொன்றில் டிரைவர் நெடுஞ்சாலையில் கிடக்கும் இரும்பு கம்பிகளைக் கண்டு நிறுத்துவதையும் பார்க்க முடிகிறது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஓட்டுநர்கள் ஆபத்துக்களில் இருந்து விலகிச் சென்றிருந்தால் விபத்துகளைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதாவது, காட்சிகளில் காணப்பட்ட முதல் விபத்து மெத்தைகளின் குவியலை ஏற்றிச் செல்லும் டிரக்கில் தொடங்கியது. அது சாலையில் நகர்ந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு மெத்தை கீழே விழுந்தது, உடனடியாக மற்ற ஓட்டுநர்கள் வளைந்து, பாதைகளை மாற்றத் தொடங்கினர்.

ஆனால், ஒரு வெள்ளை நிற கார் மாட்டும் மெத்தையைத் தவிர்த்து பாதையை மாற்றுவதற்குப் பதிலாக சாலையில் நின்றது. அப்போது பின்புறமாக வந்த தண்ணீர் விநியோகம் செய்யும் லாரி கார் மீது மோதியது. லாரி அதன் பக்கமாக கவிழ்ந்து, மற்ற வாகன ஓட்டிகளின் மீது ஏறி கடுமையான விபத்தை ஏற்படுத்தியது.

இரண்டாவது விபத்து காட்சியில், சில இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலையில் உருளுவதைப் பார்த்ததும், பல கார்கள் கம்பிகளைக் கடந்து சென்றன, ஆனால் ஒரு வெள்ளை வேன் திடீரென நின்றது, இதனால் ஒரு கார் அதன் பின் கதவுக்குள் மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.

இவ்விரண்டு விபத்துகளைத் தொடர்ந்து, சாலைகளில் இதுபோன்ற எதிர்பாராத அபாயங்களைத் தவிர்க்குமாறும், எக்காரணம் கொண்டும் சாலையில் காரை  நிறுத்த வேண்டாம் என்றும் அபுதாபி காவல்துறை அதன் சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

UAEயின் போக்குவரத்துச் சட்டத்தின் படி, சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்தினால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 6 டிராஃபிக் பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ரோந்து இயக்குநரகத்தின் இயக்குனர் பிரிகேடியர் மஹ்மூத் யூசெப் அல் பலுஷி பேசிய போது, கார் பழுதடைந்தால், சாலையில் இருந்து விலகி, அவசரகால சூழ்நிலைகளுக்கு நியமிக்கப்பட்ட பகுதிகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்றும், மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே சாலையின் வலது ஓரத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நான்கு வழி எச்சரிக்கை சமிக்ஞைகளைப் பயன்படுத்தி, பின்னர் அருகிலுள்ள வெளியேறும் இடத்திற்குச் செல்லுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!