சாலையை கடந்தால் 10,000 திர்ஹம்ஸ் அபராதம்.. அமீரகத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து சட்டங்கள்.. அடுத்த ஆண்டு முதல் அமல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளுக்குநாள் பெருகி வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தி, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் போக்குவரத்து சட்டங்கள் அமீரக அரசாங்கத்தால் கடுமையாக்கப்பட்டுள்ளன. UAE அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்த புதிய கூட்டாட்சி ஆணை சட்டம், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய போக்குவரத்து சட்டங்களில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 200,000 திர்ஹம் வரை அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய திருத்தப்பட்டுள்ள போக்குவரத்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போக்குவரத்து குற்றங்கள் மற்றும் அவற்றுக்கு விதிக்கப்படும் தண்டனை மற்றும் அபராதங்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
சட்டவிரோதமாக சாலையைக் கடத்தல்:
இப்போது அதிக அபராதத்துடன் வரும் போக்குவரத்து விதிமீறல்களில் நியமிக்கப்படாத பகுதிகளில் இருந்து சாலையைக் கடப்பதும் ஒன்றாகும். தற்போது, மீறலுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும், புதிய சட்டத்தின் கீழ், குற்றமானது போக்குவரத்து விபத்தில் முடிந்தால், மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 5,000 திர்ஹம்ஸ் முதல் 10,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅதேபோல், 80 கிமீ வேக வரம்பு அல்லது அதற்கும் அதிகமான வேக வரம்புடன் குறிப்பிடப்படாத பகுதிகளில் இருந்து கடக்கும் எவருக்கும் அதிக அபராதம் விதிக்கப்படும். புதிய சட்டத்தின் படி, அவர்கள் 3 மாதங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் 10,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதம் அல்லது இரண்டில் ஏதேனும் ஒரு தண்டனை விதிக்கப்படும்.
போதைப்பொருள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் போதையில் வாகனம் ஓட்டுவது என்பது கடுமையான போக்குவரத்து குற்றமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் போதைப்பொருள் உட்கொண்டோ அல்லது குடிபோதையிலோ வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு சுமார் 200,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றம் சிறைத்தண்டனை மற்றும் 30,000 திர்ஹம்ஸ்க்கு குறையாத அபராதம் விதிக்கும். முதல் முறை செய்யும் குற்றத்திற்கு ஒருவரின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாதங்களுக்கு குறையாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படலாம்; இரண்டாவது முறை என்றால் ஒரு வருடமும், மூன்றாவது குற்றத்திற்கு பிறகு ரத்து செய்யவும் உத்தரவிடப்படலாம்.
அதேபோல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ அல்லது வாகனம் ஓட்ட முயற்சித்தாலோ அவருக்கு சிறைத்தண்டனை மற்றும் 20,000 க்கு குறையாத மற்றும் 100,000 திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படும்.
மீறுபவரின் ஓட்டுநர் உரிமத்தை நீதிமன்றம், முதல் முறை 3 மாதங்களுக்குக் குறையாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யும்; இரண்டாவது முறை 6 மாதங்கள் மற்றும் மூன்றாவது முறை ரத்து செய்யப்படும்.
விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லுதல், தகவல்களை வழங்குவதில் தோல்வி
ஒருவர் வேண்டுமென்றே பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்தால், அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் 50,000 திர்ஹம்களுக்குக் குறையாத மற்றும் 100,000 திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்:
- போக்குவரத்து விபத்து ஏற்படும் போது (சரியான காரணமின்றி) நிறுத்தத் தவறியது, இதன் விளைவாக மக்கள் காயமடைகின்றனர்.
- ஒரு குற்றம் அல்லது விபத்தை ஏற்படுத்திய மற்றும் சம்பவத்தின் சூழ்நிலைகளுக்கு பொறுப்பான நபரை வெளிப்படுத்தும் தகவலை வழங்கத் தவறிய வாகன உரிமையாளர் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடுதல்.
- போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி வாகனங்கள், ராணுவ வாகனங்கள் அல்லது பாதுகாப்புப் பணியாளர்களின் வாகனங்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது வேண்டுமென்றே மோதுதல்.
இடைநிறுத்தப்பட்ட, அங்கீகரிக்கப்படாத உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல்
அமீரகத்தில் இடைநிறுத்தப்பட்ட உரிமத்துடன் வாகனம் ஓட்டினால், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் 10,000 திர்ஹம்ஸ்க்கு குறையாத அபராதமும் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஒன்று விதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், நாட்டில் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்துடன் UAE சாலைகளில் வாகனம் ஓட்டும் எவருக்கும் முதல் குற்றத்திற்காக 2,000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் செய்யும் குற்றங்களுக்கு, 3 மாதங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையும், 5,000 முதல் 50,000 திர்ஹம் வரையிலான அபராதமும் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்றும் விதிக்கப்படும்.
முறையான உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
அமீரக சாலைகளில் முறையான உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அல்லது வேறு வகை வாகனங்களுக்கு உரிமம் பயன்படுத்தி பிடிபட்டால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5,000 திர்ஹம்ஸ் முதல் 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் அல்லது இந்த இரண்டு அபராதங்களில் ஒன்று தண்டனையாக விதிக்கப்படும்.
உதாரணமாக, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கப்படுவதில்லை, அதற்கு வேறு அனுமதி தேவை. மீண்டும் மீண்டும் குற்றம் செய்தால், ஓட்டுநருக்கு மூன்று மாதங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை மற்றும் 20,000 திர்ஹம்ஸ் முதல் 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஒன்று தண்டனையாக விதிக்கப்படும்.
அலட்சியத்தால் ஏற்படும் மரணம்
சாலையில் ஒரு நபரின் மரணத்திற்கு காரணமானவருக்கு சிறைத்தண்டனை மற்றும் 50,000 திர்ஹம்ஸ்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும். பின்வரும் மோசமான சூழ்நிலையில் குற்றம் நடந்தால், தண்டனையானது ஒரு வருடத்திற்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஒன்று வழங்கப்படும்:
- சிவப்பு விளக்கை தாண்டிச் செல்லுதல்
- மது பானங்கள், அல்லது ஏதேனும் போதைப்பொருள் அல்லது சைக்கோட்ரோபிக் பொருட்களின் உட்கொண்டு வாகனம் ஓட்டுதல்
- இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல்
- வெள்ளத்தின் போது பள்ளத்தாக்கில் வாகனம் ஓட்டுதல்
லைசென்ஸ் பிளேட்டை தவறாகப் பயன்படுத்துதல்
பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்பவருக்கு சிறைத்தண்டனை மற்றும்/அல்லது 20,000 திர்ஹம்ஸ்க்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்:
- லைசென்ஸ் பிளேட்டை போலியாக உருவாக்குதல் அல்லது பின்பற்றுதல் அல்லது போலியான லைசென்ஸ் பிளேட்டை பயன்படுத்துதல்
- லைசென்ஸ் பிளேட்டின் தரவை சிதைத்தல், அழித்தல் அல்லது மாற்றுதல்
- லைசென்ஸ் பிளேட்டை அழிக்கப்பட்டது, சிதைக்கப்பட்டது அல்லது மாற்றப்பட்டது என்பதை அறிந்து மற்றவர்களைப் பயன்படுத்த அனுமதித்தல்.
- உரிமம் வழங்கும் ஆணையத்தின் அனுமதியின்றி ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு லைசென்ஸ் பிளேட்டை மாற்றுதல்.
குறிப்பாக, போக்குவரத்து ஒழுங்குமுறை தொடர்பான 2024 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 14 இன் கீழ் விதிக்கப்படும் அபராதங்கள் “வேறு எந்த சட்டத்திலும் விதிக்கப்பட்டுள்ள கடுமையான தண்டனையை பாரபட்சம் காட்டாது” என்று UAE அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel